புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழையின் வடஎல்லை, கண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாகச் செல்கிறது

Posted On: 17 JUN 2020 2:51PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:  

  • தென்மேற்குப் பருவமழையின் வடஎல்லை, கண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாகச் செல்கிறது.
  • கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டைப் பகுதிகளில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது கடல் மட்டத்திற்கு மேலே 3.6 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது.
  • வடக்கு கொங்கன் மற்றும் அண்டைப் பகுதிகளில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது கடல் மட்டத்திற்கு மேலே 3.5 மற்றும் 7.6 கிலோ மீட்டர்  தூரத்திற்கு இடையே பரவியுள்ளது.
  • மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக் கூடும் 17 மற்றும் 21-ம் தேதிகளில்  கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும், 17, 18 தேதிகளில் கொங்கன் மற்றும் கோவாவிலும் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும்.

-----


(Release ID: 1632074) Visitor Counter : 169