புவி அறிவியல் அமைச்சகம்
தென்மேற்குப் பருவமழை மேற்கு மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மேலும் முன்னேறியுள்ளது
Posted On:
16 JUN 2020 2:57PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
- தென்மேற்கு பருவமழை, மேற்கு மத்தியப்பிரதேசத்தின் மேலும் சில பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளில் முன்னேறியுள்ளது.
- பருவமழையின் வடஎல்லை, கண்டலா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாகச் செல்கிறது.
- வடக்கு வங்கக் கடலுக்கு மேற்பகுதியிலும், அண்டைப் பகுதிகளிலும், காற்றழுத்த தாழ்வுமண்டலம் இம்மாதம் 19-ம் தேதி உருவாகக்கூடும்.
-----
(Release ID: 1631912)
Visitor Counter : 195