வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2020 மே மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண்
Posted On:
15 JUN 2020 12:00PM by PIB Chennai
கடந்த மே மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணை மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்குமான (2011-12=100 அடிப்படையாகக் கொண்டது) மே மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டெண் (-2.24%) குறைந்து 117.7ஆக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இது 120.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாதந்தோறுமான மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில், மே மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க விகிதம் -3.21% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 2.79 விழுக்காடாக இருந்தது.
-----
(Release ID: 1631662)
Visitor Counter : 250