புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2020 மே மாதத்துக்கான ஊரகப் பகுதி, நகர்ப்புறப் பகுதி, ஒருங்கிணைந்த பகுதிகளுக்கான குறிப்பிட்ட உப குழுக்கள், குழுக்களின் நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை 2012= 100).

Posted On: 12 JUN 2020 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), குறிப்பிட்ட உப குழுக்கள் மற்றும் குழுக்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டை (சிபிஐ) 2012=100 என்ற அடிப்படையில் வெளியிட்டுள்ளது. 2020 மே மாதம்( தற்காலிகம்) மற்றும் ஏப்ரல் ( இறுதி) மாதங்களுக்கான இந்தக் குறியீடு ஊரகப்பகுதி. நகர்ப்புறப் பகுதி, ஒருங்கிணைந்த பகுதியை உள்ளடக்கியது. அகில இந்திய ஊரகப் பகுதி, நகர்ப்புறம் மற்றும் ஒருங்கிணைந்த பகுதி ஆகியவற்றுக்கான நுகர்வோர் உணவு விலைக் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office - NSO), கள இயக்கப் பிரிவின் களப்பணியாளர்கள் வாராந்திர பட்டியல் அடிப்படையில், குறிப்பிட்ட 1114 நகர்ப்புறச் சந்தைகள், குறிப்பிட்ட 1181 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு சேகரிக்கும் தரவுகளின் அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கையடுத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, களப்பணியாளர்கள் நேரடியாகச் சென்று , நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கான தரவு சேகரிப்பது, மார்ச் 19-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 2020 மே மாதத்தில், தரவு சேகரிக்கப்பட்டது. வாய்ப்புள்ள இடங்களுக்கு களப்பணியாளர்கள் நேரடியாகச் சென்றும், குறிப்பிட்ட சந்தைகளிடமிருந்து தொலைபேசி வாயிலாகவும் இந்தத் தரவுகள் திரட்டப்பட்டன.


(Release ID: 1631199) Visitor Counter : 241


Read this release in: Telugu , English , Urdu , Hindi