புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை, தெற்கு கர்நாடகாவின் உட்பகுதிகள், ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள், ஆகிய இடங்களிலும், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதிகள் முழுவதிலும் மேலும் முன்னேறியுள்ளன.

Posted On: 07 JUN 2020 2:45PM by PIB Chennai

இந்திய வானியல் ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம், புதுதில்லி ஆகியவை கூறுவதாவது

 

  • தெற்கு கர்நாடகாவின் உட்பகுதிகள், ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள், ஆகிய இடங்களிலும், வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதிகள் முழுவதிலும், வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகள் பலவற்றிலும், வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதிகள் முழுவதிலும், வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதிகள் சிலவற்றிலும், வடகிழக்குப் பகுதிகளில் மேலும் சில பகுதிகளிலும், மேலும் முன்னேறியுள்ளது.

 

  • தற்போது பருவமழையின் வட எல்லை, கார்வார், ஷிமோகா, தும்குரு, சித்தூர், சென்னை ஆகிய இடங்கள் வழியாகச் செல்கிறது.

 

  • தென்மேற்குப் பருவமழை, மத்திய அரபிக்கடலில் மேலும் சில பகுதிகள், கோவா, கொங்கணின் சில பகுதிகள், கர்நாடகாவின் மேலும் சில பகுதிகள், ராயலசீமாவின் மேலும் சில பகுதிகள், தமிழ்நாட்டின் எஞ்சியுள்ள பகுதிகள், ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப்பகுதிகள் சிலவற்றிலும், வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடக்குப்பகுதிகளில் மேலும் சிலவற்றிலும், வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் அடுத்த இருபத்துமூன்று நாட்களில் மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

 

 

  • தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிராவில் மேலும் சில பகுதிகள், கர்நாடகாவின் மேலும் சில பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரப்பிரதேசத்தின் மேலும் சில பகுதிகள், வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள், சிக்கிம்,டிசாவின் சில பகுதிகள், மேற்கு வங்கத்தின் கங்கைக் கரையோரப் பகுதிகள், ஆகிய இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் முன்னேறுதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

 

  • வங்காளவிரிகுடா, அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உள்ள புயல் சுழற்சி, தற்போது வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதிகளில் நிலைகொண்டு, இடைநிலை வளிமண்டல நிலை வரை விரிவடைந்துள்ளது.

 

 

  • இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்குமுகமாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக் கூடும்.

 

  • கேரளா கடற்கரையில் இருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கடல் மட்டத்திற்கு 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் புயல் சுழற்சி நிலை கொண்டுள்ளது.

(Release ID: 1630057)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi