ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் திட்டத்துக்காக பஞ்சாப் முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்.

Posted On: 06 JUN 2020 5:53PM by PIB Chennai

2020 மார்ச் மாதத்திற்குள் கிராமப்பகுதி வீடுகள் அனைத்திற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர்சிங்கிற்கு மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு. கஜேந்திரசிங் செகாவத் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜல் ஜீவன் இயக்கத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஈடுபாட்டைக் காட்டியதற்காக முதலமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் எஞ்சிய வீடுகளுக்கும் குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்குவதுடன் மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் போதிய அளவு  தரமான தண்ணீரை வழக்கமாகவும், தொலை நோக்க அடிப்படையிலும் குடிநீர்க்குழாய் இணைப்பு மூலம் வழங்கும் ஜல் ஜீவன் இயக்கத்தை மாநிலம் திறம்பட செயல்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2020-21-இல் 15-வது நிதிக்குழுவின் மானியமாக பஞ்சாப் மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ.1388 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் குடிநீர் மற்றும் தூய்மைத் திட்டங்களுக்காக கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டம், தூய்மை இந்தியா கிராமப்புற இயக்கம், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கேம்பா, சிஎஸ்ஆர் நிதி, உள்ளூர்ப்பகுதி மேம்பாட்டு நிதி போன்ற 15-வது நிதிக்குழுவின் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கிடைக்கும்  நிதிஆதாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிராம அளவிலான குடிநீர் விநியோகப் பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துவதுடன், ஒவ்வொரு கிராமத்தின் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அனைத்து விதமான ஆதாரங்களையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது., 

                                                                                         ***


(Release ID: 1629943)