ஜல்சக்தி அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        ஜார்க்கண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு 572 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                05 JUN 2020 4:24PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ஜார்கண்ட் மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆண்டு செயல் திட்டத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு ஜார்கண்ட் சமர்ப்பித்தது. இதற்கான கூட்டம் காணொளி மாநாட்டின் மூலம் நடைபெற்றது. மாநாட்டிற்கு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று  துறையின் செயலர் தலைமை வகித்தார். 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளிலும் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஜல் ஜீவன் மிஷன் திட்டம் பிரதமரின் முதன்மையான திட்டமாகும். இதைச் செயல்படுத்துவதற்காக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மாநிலங்களுடன் இணைந்து திட்ட வழிமுறைகளை வகுத்து வருகிறது.
 
2020- 21ஆம் ஆண்டுக்கு ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 572.23 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2019 -20ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 267.69 கோடி ரூபாய் நிதியுடன் ஒப்பிடுகையில், இது கணிசமான அளவு அதிகமாகும்
                
                
                
                
                
                (Release ID: 1629732)
                Visitor Counter : 249