நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள் விநியோகம் தொடர்பாக “தி வைர்” வெளியிட்டுள்ள செய்திக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை மறுப்பு

Posted On: 04 JUN 2020 9:02PM by PIB Chennai

பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம்: 14.40 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே மாதத்துக்கான உணவுதானியங்கள் வழங்கப்படவில்லை” என்ற தலைப்பில் “தி வைர்” தளத்தில் திரு.கபிர்  அகர்வால் எழுதியுள்ள செய்திக் கட்டுரைக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மறுப்புக்கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கட்டுரையில் பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்தில் 14.4 கோடி மக்களும், மே மாதத்தில் 6.44 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் உணவுதானியங்களைப் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை எடுத்துப் பகிர்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை குறிப்பிட்டுள்ளது. முழு பொதுமுடக்கக் காலத்திலும் கூட, உணவுதானியங்கள் விநியோகத்தை இந்திய உணவுக்கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் மிகவும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை சுமார் 103 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 206 கோடி மக்களுக்கு, அதாவது ஒரு மாதத்துக்கு 68 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு ஜூன் மாதத்தில் விநியோகிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 1.72 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை இந்திய உணவுக்கழகம் அனுப்பியுள்ளது. இது மே மாதத்தில் 1.29 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. ஜூன் மாதத்தில் இதுவரை சராசரியாக தினமும் 1.39 லட்சம் மெட்ரிக் டன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1629465

 



(Release ID: 1629571) Visitor Counter : 147