அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அமேரி பனி அடுக்கு (ஏஐஎஸ்) விரிவாக்கம் காரணமாக காலநிலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென என்சிபிஓஆர் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது

Posted On: 03 JUN 2020 8:48PM by PIB Chennai

அண்டார்டிகாவில் உள்ள அமேரி பனி அடுக்கு எல்லைகள் 2016 ஆம் ஆண்டில் இருந்ததைத் காட்டிலும், 2021 ஆம் ஆண்டில் 24% விரிவாக்கம் அடையும் என்றும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 24% விரிவாக்கம் அடையும் என்றும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி தேசிய மையம் (என்சிபிஓஆர்) கணித்துள்ளது. என்சிபிஓஆரின் இந்த கணிப்பானது, ஏஐஎஸ் முழுவதிலும் 60,000 சதுர கிமீ பரப்பளவையும் செயற்கைகோள் மூலமாக 16 ஆண்டுகளாக கண்காணித்து பெறப்பட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டது. இந்த ஆய்வு, கடல் மற்றும் வளிமண்டல பகுதிகளில் ஏற்படும் தற்போதைய மாற்றங்களை சிறப்பாக புரிந்து கொள்ள உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள என்சிபிஓஆர்-இன் மூத்த விஞ்ஞானி டாக்டர் அவினாஷ் குமார், 2001 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான என்சிபிஓஆர் ஆய்வைப் பற்றி கூறுகையில், ‘‘புவி வெப்பமடைதல் சூழலின் பின்னணியில், முன்னறிவிக்கப்பட்ட பனி அடுக்குகளின் விரிவாக்கம் சரியான அளவிற்கு நெருக்கமாக ஒத்துப் போகிறது என்பதை ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. மேலும், கடந்த காலத்தின் புனரமைப்பு, கடல் வெப்ப ஏற்ற இறக்கத்தின் எதிர்கால செயல்பாட்டின் முன்கணிப்பு மற்றும் அண்டார்டிக் அமேரி பனி அடுக்கின் வெகுவான மாற்ற அளவு ஆகியவற்றை தீர்மானிப்பதற்கும், சரிபார்ப்பதற்கும் செயற்கைகோள் கணிப்பு மற்றும் புள்ளிவிவர நுட்ப முறைகள் சரியாக இருப்பதையும் இந்த ஆய்வு தெளிவாக நிரூபித்துள்ளது. காலநிலை மாற்ற விளைவுகள் மற்றும் அதனை கண்காணிப்பதற்கும் அளவிடுவதற்கும் முக்கியமான சில முறைகள் இவை. உலகளாவிய காலநிலை மாற்றத்தின் பிரதிபலிப்பு, நிலையான சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான கண்காணிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வுகள் அவசியம் என்பதால் வேறு இடங்களிலும் இந்த செயல்முறைகள் மேற்கொள்ளப்படலாம்’’ என்றார். 



(Release ID: 1629422) Visitor Counter : 193