தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்பட ஊடக அமைப்புகள் பகுப்பாய்வு, தன்னாட்சி அமைப்புகள் குறித்த பரிசீலனை ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்கள் அறிக்கையை சமர்ப்பித்தன

Posted On: 02 JUN 2020 8:10PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் /மூடுதல்/ இணைத்தல் மற்றும் இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள் பற்றிய பரிசீலனை ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்கள், தங்களது அறிக்கைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகரிடம் இன்று சமர்ப்பித்தன. அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிகழ்வின் போது இந்தக் குழுக்களின் தலைவர் திரு பிமல் ஜுல்கா உடனிருந்தார். மற்ற உறுப்பினர்கள் காணொLi மாநாடு மூலமாக நிகழ்ச்சியில் இணைந்து கொண்டனர்.

 

திரைப்படச் செயல்பாடுகள் தொடர்பான அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்வது, செழுமைப்படுத்துவது ஆகியவற்றுக்காக திரு பிமல் ஜுல்கா தலைமையில் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழு எட்டு கூட்டங்களை நடத்தியது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம், திரைப்படத்துறைp பிரிவு, தொலைக்காட்சிக்கல்வி அமைப்பு, திரைப்பட விழாக்கள் இயக்குரகம், இந்திய தேசிய திரைப்பட ஆவணத் தொகுப்பு அமைப்பு போன்ற அமைப்புகளின் மேம்பாட்டுக்காக வரையறுக்கப்பட்ட வளர்ச்சிப் பாதைகளை இந்தக் குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன.

 

இந்த அமைப்புகள் ஒரே செயலை தனித்தனியாகச் செய்வதால், ஒரே செயல் பலமுறை செய்யப்படுகிறது. இது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காக இந்த அனைத்து அமைப்புகளையும் நான்கு விரிவான பிரிவுகள் கொண்ட ஒரே அமைப்பாகக் கொண்டு வரலாம் என்று இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட விழா, பாரம்பரியம், அறிவு என்ற நான்கு பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் மிகச்சிறந்த நிபுணர்கள் தலைமை வகிப்பார்கள். தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வர்த்தக ரீதியிலான திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நிதிஉதவி செய்ய, திரைப்பட வளர்ச்சி நிதியம் ஒன்றை உருவாக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

இக்குழுக்களின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர், “இந்த அறிக்கை அலமாரிகளில் முடங்கிவிடாது. நானே இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்து என்னுடைய அமைச்சக அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிப்பேன். நன்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, இந்த அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

 

 

திரு பிமல் ஜுல்கா தலைமையிலான தன்னாட்சி அமைப்புகள் பற்றிய பரிசீலனைக்கான நிபுணர் குழுவில் திரு ராகுல் ரவாய்ல், கே பீர், திரு.ஷ்யாமா பிரசாத், டீ எஸ்.நாகபரணா போன்ற பிரபல திரைப்பட ஆளுமைகளும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச் செயலரும் நிதி ஆலோசகரும் (தகவல் ஒலிபரப்பு), திரைப்படப்பிரிவின் இணைச் செயலரும் இக்குழுவில் உறுப்பினர்கள்.

 

திரைப்பட ஊடகப்பிரிவுகளை பகுப்பாய்வு செய்தல்/ மூடுதல்/இணைத்தல் ஆகியவற்றுக்கான நிபுணர் குழுவுக்கும் திரு பிமல் ஜுல்கா தலைமை வகித்தார். இக்குழுவில் திரு ராகுல் ரவாய்ல், ஏ. கே. பீர், திரு.ஷ்யாமா பிரசாத், திரு டீ. எஸ். நாகபரணா, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் மற்றும் நிதி ஆலோசகர் (தகவல் ஒலிபரப்பு), தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், CFSI யின் தலைமைச் செயல் இயக்குர், NFAI இயக்குர், DFF இயக்குர், திரைப்படப்பிரிவின் தலைமை இயக்குநர் மற்றும் இணைச் செயலர் (திரைப்படப் பிரிவு) ஆகியோர் உறுப்பினர்கள்.

 

 

திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்/ மூடுதல்/ இணைத்தல் ஆகியவற்றுக்கான நிபுணர் குழுவிற்கு பின்வரும் பணிக்குறிப்புகள் இருந்தன

 

  • தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), இந்தியக் குழந்தைகள் திரைப்படசங்கம் (CFSI) ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பரிசீலித்தல்.

 

  • தேவைப்பட்டால் NFDC, CFSI ஆகியவற்றை மூடுவது அல்லது வேறு மாற்று வழிகளை யோசிப்பது குறித்து பரிந்துரைத்தல்.

 

  • ஒரே குடையின் கீழ் செயல்படக்கூடிய வகையிலான ஒரு அமைப்பை உருவாக்குவது பற்றிய தீர்மானத்தின் தன்மையை  --- அரசு அமைப்பு, பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்பு --- இறுதியாக்குதல்.

 

  • உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரே குடையின் கீழ் செயல்படக்கூடிய அமைப்பின் பணி நிபந்தனகளையும், அந்த அமைப்பின் அனைத்து ஊடகப்பிரிவுகளின் பணி நிபந்தனைகளையும் பரிசீலித்த பிறகு இறுதியாக்குதல்.

 

  • உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரே குடையின் கீழான அமைப்பின் கட்டமைப்பை இறுதியாக்குதல்.

 (Release ID: 1628927) Visitor Counter : 77