ஊரக வளர்ச்சி அமைச்சகம்
அமெரிக்க அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு
Posted On:
02 JUN 2020 8:34PM by PIB Chennai
அமெரிக்க அதிபர் மேதகு டொனால்டு டிரம்ப்-புடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.
ஏழு நாடுகளைக் கொண்ட ஜி7 குழுவுக்கு அமெரிக்கா தலைமை வகிப்பது குறித்து விவாதித்த டிரம்ப், இதனை தற்போது உள்ள உறுப்பினர்களுடன் இந்தியா உள்ளிட்ட பிற முக்கிய நாடுகளை சேர்த்து விரிவுபடுத்த தான் விரும்புவதாகக் கூறினார். இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதிபர் டிரம்ப்-பின் புத்தாக்க மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் திரு.மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும், ஜி7 அமைப்பை விரிவாக்கம் செய்வது என்பது, கோவிட்-19 தொற்றுக்குப் பின்பு ஏற்படும் உலகச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்று மோடி கூறினார். ஜி7 மாநாடு வெற்றிகரமாக அமைய அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் எழுந்துள்ள மக்களின் போராட்டங்களுக்கு கவலை தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமைக்கு விரைவில் தீர்வுகாண வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றுப் பரவல் நிலை, இந்திய-சீன எல்லை நிலவரம், உலக சுகாதார அமைப்பை சீரமைக்க வேண்டியதன் அவசியம் போன்ற
(Release ID: 1628924)
Visitor Counter : 292