அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

SARS-CoV-2 கிருமியின் பிரதானப் புரோட்டியேசைக் குறிவைத்து COVID-19 க்கு சிகிச்சையளிப்பதற்காக மருந்து வங்கி தரவுத்தளத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மறுநோக்கம் செய்கிறது வாரணாசி IIT, BHU.

Posted On: 02 JUN 2020 3:32PM by PIB Chennai

SARS-CoV-2 மருந்து மூலக்கூறை விரைவாக கண்டறிய கிடைக்கக்கூடிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளிலிருந்து ஈயக்கலவை(களை) அடையாளம் காணும் வாரணாசியின் இந்தியத் தொழில் நுட்பக்கழகம் - பானாரஸ் இந்து பல்கலைக்கழகம் - (IIT BHU) வின் ஆராய்ச்சிக்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பேராசிரியர் விகாஷ் குமார் துபேயின் ஆராய்ச்சி குழு, SARS-CoV-2 பிரதான புரோட்டியேசின் தடுப்பானாக மருந்து வங்கியின் தரவுத்தள சேர்மங்களை ஆராய்வதன் மூலம் SARS-CoV-2க்கு எதிராக புதிய மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. SARS-CoV-2 திரட்டல் மற்றும் பெருக்கலுக்கு தேவையான ஒரு முக்கிய நொதி இதுவாகும். (மருந்து வங்கி என்பது FDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருந்து சேர்மங்களின் தரவுத்தளமாகும். இந்த தரவுத்தளம் SARS-CoV-2 க்கு எதிரா மருந்தைத் தேடப் பயன்படும்) SARS-CoV-2 பிரதான புரோட்டியேசின் தடுப்பானை அடையாளம் காண இவை விரிவா கணக்கிட்டு சோதனை ஆய்வுகளை மேற்கொள்ளும்.

****************



(Release ID: 1628725) Visitor Counter : 164