புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்திய அரபிக் கடல் மீது ஆழ்ந்த காற்றழுத்தம்: வடக்கு மகாராஷ்ட்டிரா – தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை :மஞ்சள் தகவல்.

प्रविष्टि तिथि: 02 JUN 2020 12:34PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல சிறப்பு வானிலை மையம் / புயல் எச்சரிக்கை மையம் ஆகியவற்றின் தகவல்:

கிழக்கு மத்திய அரபிக்கடல் மீதான ஆழ்ந்த காற்றழுத்தம் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கி மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று (02.06.2020) காலை 8.30 நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடல் மீது மேற்கு பஞ்சிம்-க்கு (கோவா) சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு மும்பைக்கு (மகாராஷ்ட்டிரா) 450 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு மற்றும் தென்மேற்கு சூரத்.-க்கு (குஜராத்) 670  கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

     இது அடுத்த 6 மணி நேரத்தில் புயலாகத் தீவிரமடையவும்,     அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.  இது அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, பின் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கித் திரும்பி அதன் பின் வடக்கு மகாராஷ்ட்டிரா மற்றும் அதையொட்டிய தெற்கு குஜராத் கடலோரப் பகுதியில் ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே, அலிபக் (ராய்காட் மாவட்டம், மகாராஷ்ட்டிரா) என்ற இடத்திற்கு அருகே  ஜுன் 3-ஆம் தேதி மாலை அதிதீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை கரையைக் கடக்கலாம் என தெரிகிறது.

-----


(रिलीज़ आईडी: 1628715) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati