தேர்தல் ஆணையம்

2020 ஜுன் ஜுலையில் ஓய்வு பெறும் உறுப்பினர்களின் இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான ஈராண்டுக்கொரு முறை நடைபெறும் தேர்தல்.

Posted On: 01 JUN 2020 8:16PM by PIB Chennai

பின்வரும் மூன்று மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவையின் ஆறு உறுப்பினர்கள், ஜூன் ஜூலை 2020இல் ஓய்வு பெறுவதையடுத்து, அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

 

 

வ.எண்

மாநிலம்

இடங்கள்

உறுப்பினர் பெயர்

ஓய்வு பெறும் நாள்

  1.  

அருணாச்சலப் பிரதேசம்

01

முகுத் மிதி

23.06.2020

  1.  

கர்நாடகா

04

D.  குபேந்திர ரெட்டி

 

 

25.06.2020

  1.  

பிரபாகர் கோர்

  1.  

ராஜீவ் கவுடா M.V.

  1.  

B.K.  ஹரிபிரசாத்

  1.  

மிசோரம்

01

ரொனால்ட் சபா ட்லாவ்

18.07.2020

 

 

மத்திய உள்துறை செயலரும், தேசிய நிர்வாகக் குழுவின் தலைவரும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 30. 5 .2020 அன்று வெளியிட்டுள்ள விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான ஈராண்டுக்கு ஒருமுறையிலான தேர்தல்கள் பின்வரும் திட்டப்படி நடத்தலாம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

 

 

வ.எண்

 நிகழ்வு

தேதி

 

அறிவிப்பு வெளியிடப்படும் நாள்

02 ஜுன், 2020 (செவ்வாய்க்கிழமை)

 

மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள்

09 ஜுன், 2020 (செவ்வாய்க்கிழமை)

 

பரிசீலனை

10 ஜுன், 2020 (புதன்கிழமை)

 

மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள்

12 ஜுன், 2020 (வெள்ளிக்கிழமை)

 

தேர்தல் நாள்

19 ஜுன், 2020 (வெள்ளிக்கிழமை)

 

தேர்தல் நேரம்

காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை

 

வாக்குகள் எண்ணப்படும் நாள்

19 ஜுன், 2020 (வெள்ளிக்கிழமை) மாலை 05:00 மணிக்கு

 

தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய தேதி

22 ஜுன், 2020 (திங்கட்கிழமை)

 

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டில் குறியீடு செய்வதற்கு தேர்தல் அதிகாரியால் வழங்கப்படும் குறிப்பிட்ட வரையறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஊதா நிற ஸ்கெட்ச் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் மேற்குறிப்பிட்ட தேர்தல்களில் வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்படக் கூடாது.

 

தேர்தல்கள் நியாயமாகவும் நல்ல முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் நோக்கர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் முறை கண்காணிக்கப்படுவதற்காக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள், மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் நோக்கர்களாக ஆணையம் நியமித்துள்ளது.



(Release ID: 1628659) Visitor Counter : 138