கலாசாரத்துறை அமைச்சகம்

கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக ஜார்கண்ட் நிர்வாகத்துக்கு, தனி நபர் பாதுகாப்பு உடைகள் மற்றும் இதர பொருள்களை, பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் காந்தி ஸ்ம்ருதி மற்றும் தர்ஸன் சமிதி அனுப்பியது.

Posted On: 29 MAY 2020 9:45PM by PIB Chennai

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், புதுதில்லியில் உள்ள காந்தி ஸ்ம்ருதி மற்றும் தர்ஸன் சமிதி (GSDS), ராஜஸ்தானின் லுபின் ஹியூமன் நலச்சங்கம் ஆகியவை மே 29, 2020ஆம் தேதி அன்று 200 பிபிஇ பாதுகாப்பு உடைகள், 50 தெர்மோமீட்டர்கள், 10,000  கையுறைகள், 11,000 முகக்கவசங்கள் மற்றும் 500 முகத்தடுப்பான்கள் ஆகியவற்றை ஜார்கண்ட் மாநிலத்தின் குன்ட்டி என்ற பழங்குடியின மாவட்ட நிர்வாகத்தினர் உபயோகத்துக்கு இலவசமாக அனுப்பியது.

இந்தச் சரக்கை கிரிஸி பவனில், மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு.என்.என்.சின்ஹா, இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிஎஸ்டிஎஸ் இயக்குனர் திரு.திபாங்கர்ஞான் மற்றும் லுபின் ஹியூமன் நலச்சங்கம் தலைமை நிர்வாகஅதிகாரி திரு.சீதாராம்குப்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்டதில் இருந்து, ஜிஎஸ்டிஸ் மற்றும் லுபின் ஆகியவை இணைந்து மேற்கண்ட பொருள்களை பல்வேறு அமைப்பினருக்கும், அரசுத்துறையினருக்கும், ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இலவசமாக வழங்கி வருகிறது.

மகாத்மாகாந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, புதுதில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஜிஎஸ்டிஸ் அமைப்பின் ஸ்ரீஜன் பயிற்சி மற்றும் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த மையங்கள் பாதுகாப்பு முகக்கவசங்களை உற்பத்தி செய்து இலவசமாக வழங்கி வருகின்றன. அரசின் பல துறையினருக்கும் இந்த முகக்கவசங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன.

 



(Release ID: 1627888) Visitor Counter : 214