பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில், கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்கள் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Posted On: 29 MAY 2020 2:32PM by PIB Chennai

வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப் பொருள்களை, குறைந்தபட்ச ஆதரவு விலை மூலமாக விற்பனை செய்யும் முறையை (MFP) மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய ரகப் பொருட்களை (MFP) குறைந்தபட்ச ஆதரவு விலைப்பட்டியலில் சேர்ப்பதைப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம் விற்பனைக்கு வரும் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய ரகப்பொருள்களின் எண்ணிக்கை 50 லிருந்து 73 ஆக அதிகரித்துள்ளன. நாட்டில் நிலவும் கோவிட்-19 தொற்று போன்ற சிக்கலான சூழ்நிலையிலும், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் திட்டம், வனஉற்பத்திப் பொருள்களைச் சேகரிக்கும் பழங்குடியினருக்குத் தேவையான ஆதரவை அளிக்கிறது.

கூடுதல் பொருள்களுக்கான இந்தப் பரிந்துரை மே 26, 2020ஆம் தேதி முடிந்துவிட்டது. தற்போதுள்ள 50 வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றம், இதற்கு முன் மே 1, 2020ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் அறிவிக்கப்பட்டது. வனஉற்பத்தி சிறிய ரகப் பொருள்களை, பழங்குடியினர் சேகரிக்கும் அளவும் 16 சதவீதம் முதல் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. (கில்லோ போன்ற பொருளின் சேகரிப்பு 190 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு அனைத்து மாநிலங்களிலும் வன உற்பத்திப் பொருள்களுக்கான கொள்முதலை உடனடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட பொருள்களில், 14 பொருள்கள் வேளாண் உற்பத்தி பொருள்கள் ஆகும். இவை வடகிழக்கு மாநிலங்களில் வர்த்தக ரீதியாக விளைவிக்கப்படாதவை. வனப்பகுதியில் விளைந்து கிடக்கும் பொருள்கள். ஆகையால், இந்த குறிப்பிட்ட சில வன உற்பத்தி சிறிய ரகப் பொருள்களை, குறைந்தபட்ச ஆதரவு விலைப்பட்டியலில் சேர்க்க பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

விவரங்களுக்கு:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1627631  



(Release ID: 1627667) Visitor Counter : 293