வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கொவிட் -19 ஐ எதிர்த்து கர்னல் பொலிவுறு நகரம் முக்கிய முயற்சிகளை மேற்கொள்கிறது

Posted On: 28 MAY 2020 5:03PM by PIB Chennai

கொவிட்-19 ஐ எதிர்த்து ஹரியானாவின் கர்னல் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட்) பின்வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:

1,577 தனிநபர் பாதுகாப்பு  உபகரணங்கள் உட்பட மருத்துவ உள்கட்டமைப்பு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது (ஏப்ரல் 15, 2020 வரை); 13,348 N-95 முககவசங்கள், 66,076 மூன்று அடுக்கு முககவசங்கள்; 1,873 லிட்டர் கிருமி நாசினி, 434 வி.டி.எம், 2,580 சோடியம் ஹைட்ரோகுளோரைடு; 295,805 கையுறைகள்; 05 வெப்ப ஸ்கேனர்கள்; 125 கொவிட் நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், தனிமைப்படுத்தலுக்கு 1,000 கூடுதல் படுக்கைகள்; 92 டி வகை & 36 பி வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்க தேவையான வசதிகள் மற்றும் 50 செயல்பாட்டு வென்டிலேட்டர்கள்.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி ஆலையில், ஒவ்வொரு நாளும் 300 க்கும் மேற்பட்ட கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.

முககவசங்கள் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படுகின்றன: மொத்தம் 65,000 க்கும் மேற்பட்ட முககவசங்கள்  தயாரிக்கப்படுகின்றன; ஒவ்வொரு நாளும் சராசரியாக 4,000 உற்பத்தி செய்யப்படுகின்றன; இதில் 250 க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்; சுமார் 52,000 முககவசங்கள் இன்று வரை விற்கப்பட்டுள்ளன.

கர்னல் நகரம் கொவிட் - 19 நோயாளிகளுக்கு 3,396 படுக்கைகள் திறன் கொண்டது - இதில் 1,632 அரசு கட்டிடங்கள் உள்ளன; 1,224 தர்மசாலா; மற்றும் 540 ஹோட்டல்கள். அடையாளம் காணப்பட்ட 1,000 பேரில், 43 குடிமக்கள் அரசு கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும், 914 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் இருப்பிடம் செல்டவர்  மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.

********



(Release ID: 1627622) Visitor Counter : 194