சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 28 MAY 2020 5:28PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சியுடன் மத்திய அரசு படிப்படியான, ஆக்கபூர்வ முன்கூட்டிய நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறது. அவை மிக உயர்நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

86,110 பேர் இப்போது கோவிட் நோய்த் தாக்குதலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 67,691 பேர் குணம் பெற்றிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 3,266 பேர் குணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை 42.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 குறித்த நுட்பமான தகவல்கள், வழிகாட்டுதல்கள் , அறிவுறுத்தல்கள் குறித்த ஆதாரப்பூர்வமான, அண்மைத் தகவல்களுக்கு பின்வரும் இணைப்புகளை அடிக்கடி பாருங்கள் : https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

கோவிட்-19 தொடர்பான தன்மைகள் குறித்த விசாரணைகளை technicalquery.covid19[at]gov[dot]in க்கும், மற்ற விசாரணைகளை ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva -க்கும் அனுப்பலாம்.

கோவிட் -19 குறித்த ஏதும் தகவல்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து சுகாதாரம், குடும்ப நல அமைச்சக ஹெல்ப்லைன் எண்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள் : +91-11-23978046  அல்லது 1075 (கட்டணம் இல்லா தொலைபேசி) . மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹெல்ப்லைன்களின் பட்டியல் கீழே உள்ள இணையச் சுட்டியில் தரப்பட்டுள்ளது:



(Release ID: 1627594) Visitor Counter : 205