சுற்றுலா அமைச்சகம்

நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் 'கலாச்சாரம், சுற்றுலா - கோவாவின் பொருளாதாரத்தின் இரு பக்கங்கள்' என்னும் தலைப்பில் 24வது இணையக் கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.

Posted On: 27 MAY 2020 4:52PM by PIB Chennai

'கலாச்சாரம், சுற்றுலா - கோவா பொருளாதாரத்தின் இரு பக்கங்கள்' என்னும் தலைப்பில், நமது நாட்டைப் பாருங்கள் வரிசையின் கீழ் 26 மே, 2020 அன்று நடத்தப்பட்ட இந்திய அரசின் சுற்றுலாத் துறையின் இணையக் கருத்தரங்கு, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவாவில் உள்ள அதிகம் அறியப்படாத இடங்கள், வரலாறு, கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இதில்  கலந்துகொண்டவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

 

திரு. சஞ்சீவ் சர்தேசாய் (வரலாற்றாளர்), திரு. அர்மினியோ ரிபேரியோ (கட்டிடக்கலை வல்லுநர்) மற்றும் திருவாளர் சவானி ஷெட்யி (தொல்பொருள் ஆய்வாளர்) ஆகியோர் வழங்கிய இந்த இணையக் கருத்தரங்கு, நூற்றாண்டுகளைக் கடந்து செல்லும் கோவாவின் செழிப்பையும், அதன் புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் இரவு வாழ்க்கையைத் தாண்டிய கலாச்சார பகிர்தல் மற்றும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியது.

 

இடைக்கால கடம்படோ பேரரசு விஜயநகரம், பாமனி சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானகம் ஆகியவற்றில் இருந்து, பிஜப்பூர் சுல்தானகத்தைத் தோற்கடித்த போர்ச்சுகீசியரின் கோவா படையெடுப்பு வரை கோவாவின் வரலாற்றைப் பற்றிய பார்வையை இந்த இணையக் கருத்தரங்கு வழங்கியது. சுமார் 450 வருடங்களுக்கு நீடித்த போர்ச்சுகீசிய அரசு எவ்வாறு கோவாவின் கலாச்சாரம், உணவு மற்றும் கட்டிடக்கலை மீது அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தியது என்பது குறித்து பேச்சாளர்கள் எடுத்துரைத்தார்கள்.

 

இணையக் கருத்தரங்க நிகழ்ச்சிகளின் காணொளிகள், https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured

என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் கிடைக்கின்றன.

 

இணையக் கருத்தரங்கின் அடுத்த பாகம் 28 மே, 2020 அன்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை, 'ஈடுபாடுள்ள பயணிக்கான வடகிழக்கு இந்தியா' என்னும் தலைப்பில் நடைபெறும். https://bit.ly/NorthEastDAD என்னும் சுட்டியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

***



(Release ID: 1627199) Visitor Counter : 490