புவி அறிவியல் அமைச்சகம்
அனைத்திந்திய வானிலை அறிக்கை(மதியம்)
வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா, அதையொட்டியுள்ள கிழக்கு இந்தியாவின் உள் பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த 24 மணி நேரத்துக்கு தற்போதைய வெப்ப அலைகள் தொடர்ந்து நீடிக்கக் கூடும்.
प्रविष्टि तिथि:
27 MAY 2020 12:15PM by PIB Chennai
இந்திய தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளதாவது:
மேகமூட்டம் அதிகரித்துள்ளதாலும், இடை நிலை வெப்ப வளி மண்டல அளவுக்கு தென்மேற்கு காற்று தீவிரமடைந்துள்ளதால் தென்மேற்கு பருவமழை தெற்கு வங்காள விரிகுடாவின் மேலும் பல பகுதிகளிலும், அந்தமான் கடலில் பல பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இன்று முன்னேறியுள்ளது. பருவமழையின் வடக்கு வரம்பு அட்சரேகை.5°வடக்கு/ தீர்க்கரேகை. 82°கிழக்கு, அட்சரேகை.7° வடக்கு / தீர்க்கரேகை.86° கிழக்கு, அட்சரேகை.10° வடக்கு / தீர்க்கரேகை.90° கிழக்கு, போர்ட் ப்ளேர், அட்சரேகை.15° வடக்கு / தீர்க்கரேகை.97° கிழக்கு வழியாகச் செல்லும்.
மாலத்தீவு–காமரின் பகுதியில் சில இடங்களிலும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், அந்தமான் கடலில் இதர பகுதிகளிலும், தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா பகுதியிலும் அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறது.
தெற்கு சட்டிஸ்கர் முதல் தமிழ்நாட்டின் உள் பகுதிகள் வரையிலான அலைகள் தற்போது ராயலசீமாவிலிருந்து தமிழ் நாட்டின் உள்பகுதிகள் வரை, கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் வரை விரிவடைந்துள்ளது
---
(रिलीज़ आईडी: 1627170)
आगंतुक पटल : 417