அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அரிசி உற்பத்தியை மேம்படுத்த புதிய சாத்தியம் கண்டுபிடிப்பு

Posted On: 27 MAY 2020 12:20PM by PIB Chennai

அரிசியின் மரபணுவில் உற்பத்தியை மேம்படுத்தும் சாத்தியமுள்ள பகுதியை தங்களின் புதிய ஆய்வில், தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி மையத்தின் உயிரி தொழில்நுட்ப துறை (DBT-NIPGR),  இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR-IARI), கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி மையம் (ICAR-NRRI), தில்லி பல்கலைக் கழகத்தின் தெற்கு வளாகம் (UDSC) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நான்கு இந்திய மரபுவழி அரிசிகளான - LGR, PB 1121, Sonasal & Bindli - ஆகியவற்றின் மரபணுக்களை வரிசைப்படுத்தி விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வை மேற்கொண்டனர். இவற்றின் விதைகளின் அளவு/எடையில் தோற்ற முரண்பாடுகளை இந்த ஆய்வு காட்டியது. இந்த மரபணு வேறுபாடுகளை ஆய்வு செய்தபின், இந்திய அரிசியின் முளைமக்கூழில், இதுவரை மதிப்பிட்டதை விட அதிக மரபணு வேற்றுமை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கூடுதல் தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1627108

******(Release ID: 1627158) Visitor Counter : 37