பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
எதிர்க்கட்சியினர் ஓட்டு வங்கிக்காக ஜம்மு காஷ்மீர் குடிவிபரவியல் குறித்து போலியான கவலை தெரிவிக்கின்றனர் – டாக்டர். ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
24 MAY 2020 8:54PM by PIB Chennai
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புதுதில்லியில் எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசும் போது எதிர்க்கட்சியினர் ஓட்டு வங்கிக்காக ஜம்மு காஷ்மீர் “குடிவிபரவியல்” குறித்து போலியான கவலை தெரிவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் செய்தது போன்று குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் விலக்களிப்பதன் மூலம் வாக்கு வங்கியை தங்களுக்குச் சாதகமாக சேகரித்தது போன்று செய்வது புதிய குடியுரிமை விதிகள் அறிவிக்கையானது அனுமதிக்காது என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கான புதிய குடியுரிமை விதிகள் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜம்மு காஷ்மீரில் சில குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக மேலாதிக்கத்தை அனுபவித்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு வாக்கு அளிக்கக் கூடியவர்களை மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்த்து இருந்தனர். தங்களது தந்திரங்களுக்கு கட்டுப்படாதவர்களையும் மனசாட்சிப்படி வாக்களிப்பவர்களையும் பட்டியலில் இருந்து விலக்கினர் என்று குறிப்பிட்டார். இந்த மறைமுகமான நோக்கமானது எந்த அளவுக்குச் சென்றது என்றால் அங்கிருந்து வெளியில் வரும் எவரும் குடியுரிமையையோ அல்லது வாக்குரிமையையோ பெற முடியாமல் போவது மட்டும் அல்லாமல் ஜம்மு காஷ்மீரில் 1947ல் இருந்து குடியமர்ந்த பெருந்திரளான மக்களுக்குக் கூட வாக்குரிமை அனுமதிக்கப்படவில்லை என்ற நிலைவரை சென்றது. மேலும் இவர்கள் சுயநீதிமான்களாக இருந்து கொண்டு அந்த மக்கள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் என்றும் ஆதலால் அவர்கள் குடியுரிமையோ அல்லது வாக்குரிமையோ பெறத் தகுதி அற்றவர்கள் என்றும் வாதிட்டனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
குடிவிபரவியலைத் தாங்கிப் பிடிக்கும் தொண்டர்களுக்கு தெரிவித்த கடுமையான மறுப்புரையில் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு குடிவிபரவியல் குறித்து பேசுவதற்கு தார்மீகமான அதிகாரம் ஏது எனவும் கேட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஒட்டுமொத்த காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினரும் பெருந்திரளாக வெளியேற்றப்படும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்ததன் மூலம் இவர்கள் குடிவிபரவியலுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்துள்ளனர் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டு உள்ளார். காஷ்மீர் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மைக்காக சூளுரைத்தவர்கள் அத்தகைய பன்முகக் கலாச்சாரத்தை அழித்ததன் மூலம் குற்றம் செய்தவர்களாக உள்ளனர் என அமைச்சர் முரண்நகையாகக் குறிப்பிட்டார். பன்முகத்தன்மை என்பது பள்ளத்தாக்கில் காஷ்மீரி பண்டிட் சமுதாயத்தினர் இருக்கும்போதுதான் நீடித்து இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
----
(रिलीज़ आईडी: 1626725)
आगंतुक पटल : 295