தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
‘‘ஷாஹி லிச்சி’’ மற்றும் ‘‘ஜர்தாலு மாம்பழம்’’ ஆகியவற்றை வாங்குவோரின் வீடுகளுக்கு சென்று வழங்குகிறது பிஹார் தபால்துறை
प्रविष्टि तिथि:
24 MAY 2020 6:43PM by PIB Chennai
‘‘ஷாஹி லிச்சி’’ மற்றும் ‘‘ஜர்தாலு மாம்பழம்’’ ஆகியவற்றை மக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க தபால் துறையும், பிஹார் தோட்டக்கலைத்துறையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் முடக்கம் காரணமாக, லிச்சி மற்றும் மாம்பழங்களைக் கொண்டு சென்று விற்பது விவசாயிகளுக்கு சிரமமாக இருந்தது. மக்களின் தேவையை நிறைவேற்றவும், விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி நேரடி சந்தை வாய்ப்பை வழங்கவும் பிஹார் தோட்டக்கலைத்துறையும், தபால்துறையும் கைகோர்த்துள்ளன.
பிஹார் மாநிலம் முசாபர்பூரின் ‘‘சாஹி லிச்சி’’ மற்றும் பகல்பூரின் ஜர்தாலு மாம்பழம் ஆகியவை தனது சிறப்பு நறுமணத்தால் உலக புகழ் பெற்றவை. இவைகளுக்கான தேவை எல்லா இடத்திலும் உள்ளது. இவற்றை வாங்க “horticulture.bihar.gov.in” என்ற இணையதளத்தில் மக்கள் பதிவு செய்யலாம்.
ஆரம்ப கட்டமாக ‘‘ஷாஹி லிச்சியை’’ வாங்கும் வசதி முசாபர்பூர் மற்றும் பாட்னா மக்களுக்கும், ஜர்தாலு மாம்பழங்களை வாங்கும் வசதி பாட்னா மற்றும் பகல்பூர் மக்களுக்கும் கிடைக்கும்.
(रिलीज़ आईडी: 1626696)
आगंतुक पटल : 369