அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

எச்.ஐ.வி மருந்துகளை விட காங்க்ரா தேநீர் கொரோனா வைரஸ் செயல்பாட்டைக் குறைக்கும்.

Posted On: 23 MAY 2020 2:02PM by PIB Chennai

திருத்தப்பட்ட நெறிமுறையில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் வைரஸ் பெருக்கைக் குறைப்பதற்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகளுக்கு பதிலாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், காங்க்ரா தேநீரில் உள்ள ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகளை விட கொரோனா வைரஸ் செயல்பாட்டை சிறப்பாகத் தடுக்க முடியும் என்று இமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூரை மையமாகக் கொண்ட இமயமலை உயிரி வள தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Himalayan Bioresource Technology -IHBT) இயக்குர் டாக்டர் சஞ்சய் குமார் தெரிவித்தார். சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இமயமலை உயிரி வள தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இணைய மாநாட்டின் போது டாக்டர் குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

டாக்டர் குமார் தனது உரையில், சமூகம் மற்றும் தொழில்துறைக்கு காங்க்ரா தேநீரின் நன்மைகள், மனித ஆரோக்கியத்திற்கான தேநீரின் மருத்துவப் பண்புகள் மற்றும் கொவிட்-19 நோயை எதிர்ப்பதற்காக இமயமலை உயிரி வள தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி தொழில்நுட்பங்கள் குறித்து விவாதித்தார்.கணினி அடிப்படையிலான மாதிரிகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகளை விட, ஒரு குறிப்பிட்ட வைரஸ் புரதத்துடன் மிகவும் திறமையாக பிணைக்கக்கூடிய 65 பயோஆக்டிவ் ரசாயனங்கள் அல்லது பாலிபினால்களைக் கொண்டு இமயமலை உயிரி வள தொழில்நுட்ப நிறுவனம் சோதித்த போது, இந்த ரசாயனங்கள் மனித உயிரணுக்களுக்குள் ஊடுருவி வளரும் வைரஸ் புரதத்தின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடும்”, என்று தெரியவந்ததாக டாக்டர் குமார் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) ஒரு அங்கமான IHBT, அதன் தொழில்நுட்பக் கூட்டாளர்கள் மூலம் தேயிலைச் சாறு மற்றும் இயற்கை நறுமண எண்ணெய்களைக் கொண்ட, ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி நாசினியை தயாரித்து வழங்கியுள்ளது. மேலும் SLES (சோடியம் லாரெத் சல்பேட்), SDS (சோடியம் டோடெசில் சல்பேட்) மற்றும் கனிம எண்ணெய் இல்லாமல் தேயிலைச் சாறு, இயற்கை சபோனின்கள் கொண்ட மூலிகை சோப்பு ஆகியவற்றை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த சோப்பு பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, சுத்திகரிப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் நன்மைகளை வழங்குகிறது. இந்த சோப்பை இமாச்சலப் பிரதேசத்தைத் தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன.

"தேயிலை கேடசின்ஸ் உற்பத்தி செயல்முறை M/s பைஜ்நாத் மருந்து நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் தேயிலை மற்றும் தேயிலை ஒயின்கள் விநியோகத்திற்குத் தயாராக உள்ளது, இது காங்க்ரா தேநீருக்கு ஒரு மாற்றாக இருக்கும்" என்று டாக்டர் குமார் கூறினார்.

கேடசின்கள் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும் (Anti-Oxidants), அவை உயிரணுக்களின் சேதத்தைத் தடுக்கவும், பிற நன்மைகளை வழங்கவும் உதவுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், தேயிலை வினிகர் தொழில்நுட்பம் தர்மசாலாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தேயிலை வினிகரில் உடல் பருமன் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. ஆயுஷ் பரிந்துரைத்த மூலிகைகள் கலந்த பச்சை மற்றும் கருப்புத் தேயிலைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. கொவிட்-19 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று IHBT விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

***********



(Release ID: 1626405) Visitor Counter : 243