சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 21 MAY 2020 1:53PM by PIB Chennai

கோவிட்-19 மேலாண்மைக்கு எடுத்த நடவடிக்கைகள், முடக்கத்தை அமல்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த சில முடிவுகள் பற்றி ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் சுகாதார கட்டமைப்பை அதிகரிக்க முடக்க காலம் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்றைய தேதி வரை, 45,299 பேர் 40.32 சதவீதம் பேர், அதாவது 45,299 பேர் குணமடைந்துள்ளனர். 26,15,920 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,532 மாதிரிகள் 555 பரிசோதனை கூடங்கள்(391 அரசுத்துறை,  164 தனியார்) மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் இதர மருத்துவ அமைப்புகளுடன் சேர்ந்த இந்திய மக்களிடம் சார்ஸ்-கோவ்-2 பாதிப்பை மதி்ப்பிடும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.

மத்திய மாநில அரசுகள் எடுத்த கூட்டு முயற்சிகளால், 3027 கோவிட் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் 6,50,930 கோவிட் கவனிப்பு மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு, 2.81 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள், 31,250 லட்சத்துக்கும் அதிகமான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் 11,387 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய அரசு இதுவரை 65 லட்சம் பிபிஇ பாதுகாப்பு உடைகள், 101.07 லட்சம் என்95 முக கவசங்களை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.  உள்நாட்டில் தற்போது, ஒரு நாளைக்கு 3 லட்சம் பிபிஇ பாதுகாப்பு உடைகள், 3 லட்சம் என்95  முககவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும், கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட தொற்றுநோய் நிபுணர்களை அரசு கலந்தாலோசித்து வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் அமைத்த கோவிட்-19 தேசிய சிறப்புக் குழு கடந்த மார்ச் முதல் 20 கூட்டங்களை நடத்தி பெருந்தொற்றுக்கு அறீிவியல் பூர்வ மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை வழங்கியுள்ளது.

ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையக் குழு, பெங்களூரு இந்திய அறிவியல் மைத்துடன் இணைந்து கோவிட்-19 பாதிப்பை கண்டுபிடிக்கும் மாதிரியை உருவாக்கியுள்ளது. இது நோய் பாதிப்பு பற்றிய குறுகியகால கணிப்புகள், அதன்பின் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளைத் தெரிவிக்கும்.

கோவிட் சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுவாச கருவிகள் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகளை ஊக்குவிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். இது சிறந்த பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்வது, ஒத்துழைப்புடன் செயல்படுவது தேவைக்கு தகுந்தபடி புதியவற்றை உருவாக்குவது, ஒரேவிதமான ஆராய்ச்சியைத் தவிர்ப்பது போன்றவற்றில் பொதுவான செயல்முறையை வழங்குவதில் உதவியாக உள்ளது. கோவிட்-19 தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பொருத்தமான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில், அறிவியல் தொழில்நுட்ப துறை  மற்றும் துணை அமைச்சங்கள்  ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.   கோவிட் -19 கட்டுப்பாட்டுக்கான மருந்துகள், பரிசோதனைகளுக்கு உதவும் வகையிலான ஆராய்ச்சி கூட்டமைப்பு அழைப்பை பயா டெக்னாலஜி துறை மற்றும் பயோ டெக்னாலஜி துறை ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) விடுத்துள்ளது.

*****



(Release ID: 1625809) Visitor Counter : 172


Read this release in: Urdu , Marathi , Hindi , Malayalam