அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோதுமையில் மாற்றாக இருக்கும் உயரம் குறைவான மரபணுக்கள் நெல்பயிரின் மிச்சத்தை எரிக்கும் பழக்கத்தை நீக்கும்

Posted On: 21 MAY 2020 1:36PM by PIB Chennai

இந்தியாவில் ஆண்டுதோறும் இருபத்து மூன்று மில்லியன் டன்கள் அளவிற்கு விடுபட்ட நெல்பயிரின் அடித்தட்டை மிச்சங்கள் விவசாயிகளால் எரிக்கப்படுகின்றன.  நிலத்தில் உள்ள வைக்கோலை நீக்கவும், அடுத்துப் பயிரிட வேண்டிய கோதுமைப் பயிருக்காக நிலங்களை முன்கூட்டியே பதப்படுத்திக் கொள்ளவும் மிச்சங்களை எரிக்கின்றனர். காற்று மாசுபட இந்தச் செயலானது காரணமாகிறது.  மேலும் வறண்ட சுற்றுச்சூழலால் உயரம் குறைவான குருத்து உறை இருப்பதால் பலவித கோதுமை ரகங்களும் முளைவிடுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான பூனாவில் உள்ள அகர்கார் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARI) விஞ்ஞானிகள் கோதுமையில் உயரம் குறைவான இரண்டு மாற்று மரபணுக்கள் ஆர்ஹெச்டி14 மற்றும் ஆர்ஹெச்டி18 ஆகியவற்றை விவரணையாக்கம் செய்து உருவாக்கியுள்ளனர்.  இந்த மரபணுக்கள் சிறந்த விதை முளைப்பு ஆற்றலும், நீண்ட குருத்து உறைகளும் உடையவையாக உள்ளன (உறையானது இளம் குருத்து முனையைப் பாதுகாக்கிறது).

அகர்கார் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மரபணு மற்றும் தாவரக் கலப்பின உருவாக்கல் குழுவில் இடம்பெற்றுள்ள குழுவினர்களை அறிவியல் அறிஞர் டாக்டர் ரவீந்திர பாட்டீல் வழிநடத்துகிறார்.  பாஸ்தா கோதுமையில் 6ஏ குரோமோசோமில் உயரம் குறைவான மரபணுக்களை ஏஆர்ஐ நிறுவனம் விவரணையாக்கம் செய்துள்ளது. கோதுமைக் கலப்பின வரிசைகளுக்கு சிறப்பான இந்த மரபணுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் டிஎன்ஏ அடிப்படையிலான குறியீடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாற்றீடான உயரம் குறைவான மரபணுக்களுடன் கூடிய கோதுமை வரிசைகள், எரிக்கப்படும் பயிர் மிச்சங்களைக் குறைப்பதோடு, கோதுமை விதைகளை ஆழமாக விதைக்கவும் உதவும்.  வறண்ட சுற்றுச்சூழலில் எஞ்சி இருக்கும் ஈரப்பதத்தை சிறப்பான முறையில் பயன்படுத்த இந்த முறையில் விதைக்கப்படுகிறது.

*****


(Release ID: 1625792) Visitor Counter : 280