புவி அறிவியல் அமைச்சகம்

(இந்திய நேரப்படி 17.30 மணி அளவில்) மேற்கு மத்திய வங்காள விரிகுடா மீது அதி தீவிர புயல் 'உம்-பன்': மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை: ஆரஞ்சு தகவல்.

Posted On: 19 MAY 2020 6:15PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/புயல் எச்சரிக்கைப் பிரிவின் சமீபத்திய வெளியீட்டின் படி (இந்திய நேரப்படி 17.30 மணி அளவில்):

 

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மீது இருந்த அதி தீவிரப் புயல் 'உம்-பன்' கடந்த ஆறு மணி நேரத்தில் ஒரு மணிக்கு 18 கிலோமீட்டர் என்னும் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, 19 மே, 2020 அன்று இந்திய நேரப்படி 14.30 மணி அளவில் மிகக் கடுமையான அதி தீவிரப் புயலாக உருவெடுத்து, மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் அட்சரேகை 17.0N, தீர்க்கரேகை 86.9E-க்கு அருகில், பாரதீப்புக்கு (ஒடிசா) சுமார் 420 கி.மீ தொலைவிலும், டிகாவுக்கு (மேற்கு வங்கம்) தெற்கு-தென்கிழக்கில் 570 கி.மீ தொலைவிலும், மற்றும் கேப்புபூராவுக்கு (வங்க தேசம்) தெற்கு-தென்கிழக்கில் 700  கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. வடகிழக்கு வங்காள விரிகுடாவின் மீது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்துடிகா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தரவனங்களுக்கு அருகில் உள்ள ஹட்டியா தீவுகளுக்கு (வங்க தேசம்) மத்தியில் மேற்கு வங்கம் வங்காள தேசம் இடையே 20 மே, 2020-இன் மதியத்தில் இருந்து மாலை நேரத்துக்குள்ளாக அதிகபட்சமாக மணிக்கு 155-165 கி.மீ வேகத்தில் இருந்து 185 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் (ஆந்திர பிரதேசம்) டாப்லர் வானிலை ரேடார் மூலமாக அது தொடர்ந்து கண்காணிக்கப் படுகிறது.

 

(4) மீனவர்களுக்கான எச்சரிக்கை

 

* அடுத்த 24 மணி நேரத்துக்கு தெற்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள மத்திய பகுதிகளிலும், 19 மே, 2020இல் இருந்து 20 வரை மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவிலும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

* மேலும், வடக்கு ஒடிசாவை ஒட்டியுள்ள வடக்கு வங்காள விரிகுடாவிலும், மேற்கு வங்கத்திலும் மற்றும் அருகில் உள்ள வங்க தேசக் கரையோரங்களுக்கும் செல்ல வேண்டாமென்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

***
 



(Release ID: 1625206) Visitor Counter : 131