மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுரைப்படி JEE (Main) 2020 தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான மேலும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் 19 5 2020 முதல் 24.5. 2020 வரை ஆன்லைனில் இருக்கும்.

Posted On: 19 MAY 2020 5:33PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக மாறியுள்ள சூழலில், ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயிலத் திட்டமிட்டிருந்த பல்வேறு இந்திய மாணவர்களிடமிருந்து, தாங்கள் நம் நாட்டிலேயே கல்வியைத் தொடர விரும்புவதாகவும், இதற்காக JEE (Main) 2020 தேர்வுகளை எழுத விரும்புவதாகவும் வந்துள்ள கோரிக்கைகளையடுத்து JEE (Main) 2020 தேர்வுகளை எழுத அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் NTAவிற்கு அறிவுறுத்தியுள்ளார். வேறு ஏதேனும் காரணங்களுக்காக JEE (Main) 2020 ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன அல்லது தங்களது விண்ணப்ப வழிமுறைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போன, பிற மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

 

விண்ணப்பப் படிவம் 19. 5.2020 முதல் 24.5. 2020 வரை இருக்கும்

 

வெளிநாடுகளில் சென்று கல்வி பயில எண்ணியிருந்த திட்டத்தை கைவிட்ட மாணவர்கள், இந்தியாவிலேயே கல்வியைத் தொடர்வதற்கு, இதோ ஒரு வாய்ப்பு

 

JEE (Main) 2020 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு/புதிதாகச் சமர்ப்பிப்பதற்கு, மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு நான் NTA விற்கு@DG_NTA அறிவுறுத்தியுள்ளேன்.

 

விரையுங்கள்! விண்ணப்பப்படிவங்கள் 24 மே வரை இருக்கும் pic.twitter.com/hSwXQ9GBjX

 

                             — டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் (@DrRPNishank) மே 19, 2020.

 

கோவிட்-19 காரணமாக இன்னல்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக ஜேஇஇ மெயின் 2020 விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்காக/ புதிதாக சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு இறுதி வாய்ப்பை அவர்களுக்கு தேசிய தேர்வு முகமை  (NTA) வழங்கியுள்ளது

 

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் 19 5 2020 முதல் 24.05.2020 வரை மட்டும் புதிதாக சமர்ப்பிப்பதற்கு/பூர்த்தி செய்வதற்குமான வசதி ஆன்லைனில் இருக்கும் என்று அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது

 

 

**ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது/ சமர்ப்பிப்பது ஆகியவை மாலை 5 மணி வரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11 50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும்

 

தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ பேடிஎம் மூலமாக செலுத்தலாம்.

 

விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

 

விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803 மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in

 

*****



(Release ID: 1625203) Visitor Counter : 220