புவி அறிவியல் அமைச்சகம்
வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் கடும் சூறாவளிப் புயல் உம்-பன்: மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை: ஆரஞ்சு தகவல் (காலை 11 மணி)
Posted On:
19 MAY 2020 11:54AM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சமீபத்தில் (காலை 11.00 மணி) விடுத்துள்ள புயல் எச்சரிக்கை: மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா)வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு-தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று காலை 8.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது.
இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள்(வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம்/ மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-195 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டோப்ளர் வானிலை ரேடார் மூலம் உம்-பன் கடும் சூறாவளிப் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
-------
(Release ID: 1625070)
Visitor Counter : 169