புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு வங்க கடலின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய பகுதிகளின் மீது அதிதீவிர புயல் ‘அம்பன்’: மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை: ஆரஞ்சு தகவல்
प्रविष्टि तिथि:
18 MAY 2020 10:13PM by PIB Chennai
இந்திய வானிலைத்துறை சமீபத்தில் (இரவு 9.00 மணி) விடுத்துள்ள புயல் எச்சரிக்கை: தென்வங்க கடலின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள அம்பன் அதிதீவிர புயல், வடக்கு நோக்கி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வங்க கடலின் மேற்கு மத்தியப் பகுதியில் தெற்கு பரதீப்(ஒடிசா) வுக்கு 700 கீ.மீ தொலைவிலும், தென்மேற்கு திகா-வுக்கு(மேற்குவங்கம்) 860 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென்-மேற்கு கேபுபாரா(வங்கதேசம்) 980 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது வங்கக் கடலின் வடமேற்குக்கு குறுக்கே வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடலோரப் பகுதியில் திகா(மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள்(வங்க தேசம்) அருகே சுந்தர்பன்ஸ் பகுதியில் மே 20ம் தேதி மதியம்/ மாலை அதி தீவிர புயலாக மணிக்கு அதிகபட்சம் 165-195 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
(रिलीज़ आईडी: 1625039)
आगंतुक पटल : 191