அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் -19 ஐ எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை விரிவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் -டி டி பி ஒப்புதல்

Posted On: 17 MAY 2020 6:01PM by PIB Chennai

கோவிட் -19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் வகையிலான, விஞ்ஞானிகள், தொழில்நுட்பாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள் ஆகியோரின் முயற்சிகளை வர்த்தகப்படுத்துவதற்கென தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் - டி டி பி, தாமாகவே முன்வந்து உதவி அளித்து வருகிறது. மேலும், உலகம் எதிர்நோக்கியுள்ள இந்த சுகாதார அவசர நிலையை நாடு எதிர்கொள்வதற்கு உதவும் புதிய தீர்வுகளைத் தேடும் முயற்சியிலும் டி டி பி ஈடுபட்டுள்ளது.


கடந்த ஒரு வார காலத்தில் டி டி பி, தனது மதிப்பீடு நடைமுறையின் மூலம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்துள்ளது. இதுவரை டி டி பி, வர்த்தகப்படுத்துவதற்கான 6 திட்டங்களைத் தேர்வு செய்துள்ளது. வெப்பமுறை ஸ்கேனர்கள், மருத்துவக் கருவிகள், முகக்கவசங்கள், நோயறி கருவிப் பெட்டிகள் போன்றவை இவற்றில்அடங்கும்.

****


(Release ID: 1624904) Visitor Counter : 307