புவி அறிவியல் அமைச்சகம்

கடும் சூறாவளி புயல் அம்பன் (IST 20.30 மணியளவில்) கண்காணிப்பு

प्रविष्टि तिथि: 17 MAY 2020 10:00PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் / சூறாவளி எச்சரிக்கை பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய பத்திரிகை குறிப்பு (IST 20.30 மணிளவில்) கூறுவதாவது:

 

ம்பன் என்று கூறப்படும் மிகக் கடும் சூறாவளி புயல் AMPHAN, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலிருந்து, கடந்த 6 மணி நேரமாக, மணிக்கு 9 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வடக்குமுகமாக நகர்ந்து இன்று 17 மே 2020, 17 30 மணி அளவில் தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. அட்சரேகை 12.0°N வடக்கு மற்றும் தீர்க்கரேகை 86.0°E கிழக்கு, பாராதீப்பிற்கு (ஒடிஷா) தெற்கே சுமார் 930 கிலோமீட்டர் தொலைவில்,  திகாவிற்கு (மேற்கு வங்கம்) தெற்கு தென்மேற்கு திசையில் 1080 கிலோமீட்டர் தொலைவில், கேப்புப்பாராவிற்கு (பங்களாதேஷ்)  தெற்கு தென்மேற்கு திசையில் 1200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து மிகக் கடுமையான சூறாவளி புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடுத்த 12 மணி நேரத்தில் இது கிட்டத்தட்ட வடக்குமுகமாக மெல்ல நகர்ந்து மீண்டும் வடக்கு வடமேற்குமுகமாகத் திரும்பி வங்காள விரிகுடாவில் வடமேற்கில் வேகமாக நகர்ந்து மேற்கு வங்கம் பங்களாதேஷ் கடற்கரைகளை, திகா (மேற்குவங்கம்) , ஹடியா தீவுகள் (பங்களாதேஷ்) ஆகியவற்றுக்கிடையே 20 மே 2020 அன்று மதியம் அல்லது மாலை மிக கடுமையான சூறாவளி புயலாக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

******


(रिलीज़ आईडी: 1624853) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali