அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR), இன்டெல் இந்தியா மற்றும் IIIT- ஹைதராபாத்துடன் ஒருங்கிணைந்து கொவிட்-19 ஐ எதிர்த்து நோயறிதலில் தீர்வுகள் மற்றும் இடர் அடுக்குமுறை உத்திகளை உருவாக்குவதற்காக செயல்படுகிறது.

Posted On: 15 MAY 2020 6:33PM by PIB Chennai

SARS-CoV-2 பரவலைக் குறைப்பதற்கு விரைவாக பரிசோதிப்பதுடன், ஆபத்தில் உள்ள நோயாளிகளைக் கணிக்கும் திறனும் முக்கியமானது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) , இன்டெல் இந்தியா மற்றும் ஹைதராபாத்தின் சர்வதேசத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (International Institute of Information Technology - IIIT) இணைந்து விரைவான மற்றும் குறைந்த விலையில் கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள செயல்படுகிறது, அத்துடன் தொற்றுநோயைப் புரிந்துகொள்ள கொரோனா வைரஸ் மரபணுவை வரிசைமுறையை செய்வதுடன், இணை நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இடர் அடுக்குமுறை உத்திகளை உருவாக்கவும் செயல்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்டெல் இந்தியா பல பயன்பாடுகள், சோதனைச் சாதனங்கள், தரவு சேகரிப்பு / ஒருங்கிணைப்புக்கான நுழைவாயில்கள், தரவுப் பரிமாற்ற மென்பொருள் மேம்பாட்டு மாதிரி மற்றும் செயற்கை நுண்ணறிவு மாதிரி மையத்தளம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான (end-to-end) அமைப்பை உருவாக்கி வருகிறது.

CSIR- மரபமைப்பியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (CSIR- Institute of Genomics and Integrative Biology), CSIR- உயிர்மங்கள் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (CSIR- Centre for Cellular and Molecular Biology), CSIR- நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR- Institute of Microbial Technology), CSIR- இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் (CSIR- Indian Institute of Petroleum), CSIR- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR- Central Leather Research Institute) மற்றும் பிற CSIR தொகுதி ஆய்வகங்கள் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களுடன் இணைந்து விரிவான நோயறிதல் செயல்பாடுகளைக் கண்டறிய பணிபுரியும். ஹைதராபாத்தின் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நீண்டகால ஆயத்தத்திற்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு உதவக்கூடிய இடர் அடுக்கு வழிமுறைகளை உருவாக்கும்.

**************



(Release ID: 1624368) Visitor Counter : 305