மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சமர்த் எனப்படும் நிறுவனங்கள் வள திட்டமிடலை செயல்படுத்தியது குருக்க்ஷேத்ரா, தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

प्रविष्टि तिथि: 14 MAY 2020 6:21PM by PIB Chennai

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது.      இதற்காக, மனிதவளத் துறை அமைச்சகம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வள திட்டமிடல் என்ற இணைய தள செயல்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரமான திறந்த ஆதாரக் கட்டமைப்பாகும். இது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், அளவிடக்கூடியது மற்றும் பரிணாம செயல்முறையில் இயங்கும் தானியங்கி ஆகும். இது பல்கலைக்கழகம் / உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரிய, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இப்போது, நிறுவனங்கள் வள திட்டமிடல், சம்ர்த், குருக்ஷேத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது, இது உலக வங்கி ஆதரிக்கும் தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பங்கேற்கும் ஒன்றாகும். இந்த முயற்சியின் நோக்கம் நிறுவனத்தின் செயல்முறைகளை தன்னியக்கமாக ஆக்குவதாகும்.

இந்த முன்முயற்சி உற்பத்தித்திறன் மற்றும் பல்வேறு நோக்கத்திற்கான பயன்பாட்டுகளை, நிறுவனத்தின் தகவல் மேலாண்மை மூலம் தகவல்களைத் தடையின்றி அணுகுவதன் வாயிலாக மேம்படுத்தும்.

இந்த மென்பொருளை சமர்த் குழு குருக்ஷேத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கியது. மனிதவளத் துறை அமைச்சகத்தில் உள்ள மற்றும் அணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் கூடுதல் செலவின்றி ஒரு உள் குழு மூலம் வெளியிடப்பட்டது.

****************


(रिलीज़ आईडी: 1624052) आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu