நிதி அமைச்சகம்

அடல் பென்ஷன் யோஜனா: ஐந்து ஆண்டுகள் நிறைவு

Posted On: 11 MAY 2020 5:19PM by PIB Chennai

மத்திய அரசின் மூகப் பாதுகாப்புக்கான முதன்மைத் திட்டமான, அடல் பென்ஷன் யோஜனா, (APY) , வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் 9 மே 2015 அன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதுக்குப் பின்னர், குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, குறிப்பாக கட்டமைக்கப்படாத பிரிவினைச் சார்ந்த முறைசாராத தொழிலாளர்களுக்கு அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் வருவாய்ப் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதுவரை, 2.23 கோடி பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்தியாவில் வயது முதிர்வோரின் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சவால்களை சமாளிக்க, இத்திட்டம் தற்போதும் பயனளிக்கும் வகையில் பொருத்தமானதாக இருக்கிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்களின் ஆண் பெண் விகிதம் 57 : 43 என்று உள்ளது.

 

 

ஐந்து வருட காலங்களில் APY திட்டம் மிக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. 9 மே  2020 வரையிலான காலத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 2,23,54,028. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் பதிவு செய்து கொள்ளப்பட்டனர். மூன்றாவது ஆண்டில் இது நூறு லட்சமாக இரட்டிப்பாகிது. நான்காவது ஆண்டில் ஒன்றரை கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளனர். சென்ற நிதியாண்டில் 70 லட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டனர்.

 

 

சமுதாயத்தில் மிகவும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பிரிவு மக்களை, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், பேமெண்ட் வங்கிகள், நிதி வங்கிகள், அஞ்சல் துறை ஆகியவற்றின் சோர்வில்லாத முயற்சியும், மாநில அளவிலான வங்கியாளர்களின் குழுக்கள் அளித்த ஆதரவுமே காரணம் என்று ஓய்வூதிய நிதிய கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு சுப்ரதீம் பந்தோபாத்தியாயா கூறினார்.  

 

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் மூன்று தனித்துவமான நன்மைகள் உள்ளன.  முதலாவதாக, 60 வயதை அடையும் போது ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால், உறுதிப்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, இந்த ஓய்வூதியம் சந்தாதாரரின் வாழ் நாளுக்குப் பிறகு அவரது துணைவருக்குக் கிடைக்கும். இறுதியாக அவரும் அவரது துணை ஆகிய இருவருமே இறக்கும் பட்சத்தில், அவர்களால் நியமிக்கப்பட்டவருக்கு (nominee) மொத்த ஓய்வூதியத் தொகையும் வழங்கப்படும்


(Release ID: 1623046) Visitor Counter : 307