விவசாயத்துறை அமைச்சகம்

பொது முடக்கக் காலத்தின்போது பருப்பு, எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் தொடர்ந்து நடைபெறுகிறது

Posted On: 10 MAY 2020 6:03PM by PIB Chennai

பொது முடக்கக் காலத்தின்போது கள அளவில் விவசாயிகள் மற்றும் விவசாயச் செயல்பாடுகளின் வசதிக்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசின் விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலனுக்கான துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

 

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மூலமாக, பொது முடக்க காலத்தின்போது கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களின் விவரம்

 

  • ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 9 மாநிலங்களிலிருந்து 2.74 லட்சம் மெட்ரிக் டன் கடலைப் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது.

 

  • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், அரியானா ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 3.40 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல் செய்யப்பட்டது

 

  • தெலங்கானாவிலிருந்து 1700 மெட்ரிக் டன் சூரியகாந்தி கொள்முதல் செய்யப்பட்டது

 

  • தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ஒடிஷா ஆகிய எட்டு மாநிலங்களிலிருந்து 1.71 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது.

 

கோடைப் பருவப் பயிர்களுக்கான விதைப்பு பகுதி

 

  • இந்த ஆண்டு சுமார் 34.87 இலட்சம் ஹெக்டேர் பகுதியில் கோடை நெல் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இதே காலத்தில் இது 25.29 இலட்சம் ஹெக்டேர்

 

  • சுமார் 10.32 இலட்சம் ஹெக்டேர் பகுதியில் பருப்பு பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இது 5.92 இலட்சம் ஹெக்டேராக இருந்தது.

 

  • மோட்டா தானிய வகைகள் சுமார் 9.57 இலட்சம் ஹெக்டேர் பகுதியில், பயிரிடப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில் 6.20 இலட்சம் ஹெக்டேர் பகுதியில் பயிரிடப்பட்டன.

 

  • எண்ணெய் வித்துக்கள், சுமார் 9.17 இலட்சம் ஹெக்டேர் பகுதியில், பயிரிடப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில் 7.09 இலட்சம் ஹெக்டேர் பகுதியில் பயிரிடப்பட்டன.

 

3. ரபி சந்தைப் பருவத்தில் 2020 - 21 ஆம் ஆண்டில் மொத்தம் 241.36 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமை, இந்திய உணவு கழகத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் 233 .51 இலட்சம் மெட்ரிக் டன் வாங்கப்பட்டு விட்டது.

 

4. 2020 - 21 ஆம் ஆண்டில் ரபி பருவத்தில், ரபி பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதலுக்கென, மொத்தம் 3206 கொள்முதல் மையங்கள், 11 மாநிலங்களில் செயல்படுகின்றன.

 

 

*****(Release ID: 1623032) Visitor Counter : 12