சுற்றுலா அமைச்சகம்

“நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” - சுற்றுலா அமைச்சகத்தின் சின்னம் வடிவமைப்பு போட்டி

Posted On: 06 MAY 2020 8:35PM by PIB Chennai

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் இன்று “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்”  (தேகோ அப்னா தேஷ்) சின்னம் வடிவமைப்பு போட்டியை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த போட்டியின் நோக்கம் நமது மக்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளிலிருந்து வெளிவரும் “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” பிரச்சாரத்திற்கான சின்னத்தை தேர்ந்தெடுப்பதுதான்.

பொது முடக்கத்திற்கு பின் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதால், சர்வதேச சுற்றுலாவை விட உள்நாட்டு சுற்றுலா வேகமாக மீட்கப்படும் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. உள்நாட்டு சுற்றுலா துறையில் கவனம் செலுத்துவது, சக நாட்டு மக்களை தங்கள் நாட்டை ஆராய ஊக்குவிப்பது, தங்கள் சொந்த எல்லைகளுக்குள் மிகவும் தேவையான இடைவெளி எடுப்பது ஆகியவை மூலம் வெற்றிகரமான திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்தலாம்.   

ஊரடங்கு காலகட்டத்தில், இந்திய அரசு மற்றும் அதன் பார்வையாளர்களுடனான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக சுற்றுலா அமைச்சகம், “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் வலைத்தள தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த இணையதள காட்சித் தொடரின் நோக்கம் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஊக்குவிப்பதும் ஆகும்.  இதில் அதிகம் அறியப்படாத இடங்கள் மற்றும் பிரபலமான இடங்களின் அதிகம் வெளியில் தெரியாத சிறப்பு அம்சங்களயும் தெரிவிப்பதும் அடங்கும்.

 

“நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” (தேகோ அப்னா தேஷ்)   சின்னம் வடிவமைப்பு போட்டி செயல்பாடு மை ஜி ஓ வி நேரலையில் உள்ளது, மற்றும் இணைப்பு:

https://www.mygov.in/task/dekho-apna-desh-logo-design-contest/

“நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” சின்னம் வடிவமைப்பு போட்டியின் வெற்றியாளருக்கு, இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் இந்தியாவில் வசிக்கும் இடத்திலிருந்தும் 5 இரவுகள் 6 நாட்கள் இருவருக்கான அனைத்து செலவினங்களும் அடங்கிய விடுமுறை தொகுப்பை அறிவித்துள்ளது.. போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் MyGov.in இல் கிடைக்கின்றன

*******


(Release ID: 1621799)