அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வடக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேட்டு சமவெளிகளும் / பீடபூமிகளும் பாதுகாக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : பூச்செடி உயிரின ஆய்வு

Posted On: 06 MAY 2020 6:39PM by PIB Chennai

வடக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வனங்கள் மட்டுமல்லாமல், மேட்டு சமவெளிகளும் / பீடபூமிகளும் பாதுகாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள செடிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி கழகத்தின் அறிவியலாளர்கள் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

 

மேட்டு சமவெளிகளும் மலை முகடுகளுமே வட்டார உயிரினங்களுக்கு வாழ்வளிப்பதாக இருப்பதால் பாதுகாப்புத் திட்டங்களில் அதற்கு  முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் அதிகரிக்கிறது.

 

வட்டார உயிரினங்களில் பெரும்பாலானவை மழைக்காலங்களில் மட்டுமே, குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்து மடியும்,  பூச்சி உண்ணிகளான தெரோஃபைட் உயிரினங்களே என்று டாக்டர் மண்டர் தத்தர் மற்றும் டாக்டர் ரீதேஷ்குமார் சவுத்திரி தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது

 

படம் 1: அபுலிஷன் ரனடெய் (Abutilon ranadei), மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கில் அழிந்து வரும் நிலையில் உள்ள வட்டார உயிரினம்  

 

 

மேலும் விவரங்களுக்கு டாக்டர் மண்டர் தத்தர், அறிவியலாளர், பல்லுயிர் பெருக்கம் மற்றும் தொல்லுயிரியல் குழு (mndatar@aripune.org, 020-25325057) மற்றும் டாக்டர் தகேஃபல்கர்,, இயக்குனர் (பொறுப்பு) ARI புனே  (director@aripune.org, pkdhakephalkar@aripune.org, 020-25325002)  ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்

 

 



(Release ID: 1621796) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Hindi , Punjabi