குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலராக அரவிந்த் குமார் சர்மா பொறுப்பேற்பு

Posted On: 01 MAY 2020 7:39PM by PIB Chennai

மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலராக திரு. அரவிந்த்குமார் சர்மா இன்று மே 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பணியை ஏற்ற உடனே போர்க்கால நடவடிக்கையாக அமைச்சகத்தின் பல்வேறு பணிகளை ஆய்வு செய்யும் வகையில் மூத்த அதிகாரிகளுடன் அவர் மிக முக்கியமான கூட்டங்களை நடத்தினார்.

“கோவிட் 19” தொற்று பரவியுள்ள இந்தச் சூழ்நிலையில் முக்கியமான விஷயங்கள் குறித்து அவர் விவாதித்தார். சமூகத்திற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு மிக அவசியம் என்று திரு. சர்மா உறுதிபடக் கூறினார். தற்போதைய அவசர நிலைமையைக் கடந்த பிறகு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களிலிருந்து உலகளாவிய தலைமையை உருவாக்கும் வகையில் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரவிந்த் குமார் சர்மா இதற்கு முன்பு பிரதம மந்திரி அலுவலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றினார். குஜராத் பிரிவிலிருந்து 1988ம் ஆண்டு சிவில் சர்வீஸ் அலுவல் பணியை அவர் தொடங்கினார்.

குஜராத் அரசிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அவர் பணியாற்றி வந்தார். களப்பணி, கொள்கை வகுப்புப் பணி உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அந்த மாநிலத்தில் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, கார்ப்பரேட் மேலாண்மை, தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாடு, கட்டுமான மேம்பாடு ஆகிய பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

 

*****



(Release ID: 1620399) Visitor Counter : 183