அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிமாப் நிறுவனத்தின் மூலிகைப் பொருட்கள் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்

Posted On: 26 APR 2020 6:30PM by PIB Chennai

லக்னோவில் உள்ள மத்திய மருத்துவ மற்றும் வாசனைத் தாவரங்கள் (சிமாப்) நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட 2 மூலிகைப் பொருட்களை உருவாக்கி உள்ளனர்.  இந்த மூலிகைப் பொருட்கள் மனிதரின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதோடு கொரோனா வைரஸ் தொற்றோடு பொதுவாக தொடர்புடைய வறட்டு இருமல் அறிகுறிகளை குணமாக்கவும் பயன்படுகின்றன.

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் செயல்படும் ஆய்வுக்கூடமான சிமாப் தனது மூலிகைத் தயாரிப்புகளான ”சிம்-பௌஷக்” மற்றும் ”ஹெர்பல் காஃப் சிரப்” என்ற இரண்டுக்குமான தயாரிப்பு தொழில்நுட்பத்தை தொழில்முனைவோர்களுக்கு மாற்றித் தந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதற்கு முடிவெடுத்துள்ளது.  ஒரு நபரின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டு பொருட்களிலும் 12 முக்கியமான மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.



(Release ID: 1618647) Visitor Counter : 128