அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பன்னடுக்கு உலோகக் கலவைகள், பூச்சுக்கள் போன்ற நானோமெக்கானிகல் பொருட்களைக் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு

Posted On: 22 APR 2020 5:35PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் தன்னாட்சி நிறுவனமான சர்வதேச ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், தாதுக்களில் இருந்து உலோகத்தைப் பிரித்துப் பொடியாக்கிப் புதிய பொருட்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம், அமெரிக்காவின் ஓக் ரிட்சில் உள்ள நானோமெக்கானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பன்னடுக்கு உலோகக் கலவைகள், கலவைகள், பன்னடுக்கு பூச்சுக்கள் போன்ற நானோ-மெக்கானிக்கல் பொருட்களைக் கண்டறிவதற்கான மேம்படுத்தப்பட்ட கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது..

நானோ பிளிட்ஸ் முப்பரிமானம் எனப்படும் இந்தக் கருவி, விரிவான கண்ணாடி நாரால் வலுப்படுத்தப்பட்ட பல்படியக் கலவைகள், இரட்டை அடுக்கு உருக்கு, மென்மரம், மென்களிக்கல் உள்ளிட்ட மூல முறை சோதனையில் சிறப்பான பயன்களைக் கொடுத்துள்ளது. இந்த முறை உயர் செயல்திறன் கொண்டது என்பது இதன் முக்கிய அம்சமாகும். சில மணி நேர சோதனையிலேயே 10,000 தரவுப் புள்ளிகளை உருவாக்கக்கூடிய இம்முறை, இயந்திரம் சார்ந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, செயல் படுத்தக்கூடியதாகும்.

நீண்ட வரிசை திறன் கொண்ட இந்தச் சோதனை முறை உயர் வேக நானோ உள்தள்ளல் சோதனைகளைச் செய்யும் திறன் பெற்றதாகும். இந்த உள்தள்ளல் சோதனை, கொடுக்கப்பட்ட பொருளின் மீள் குணகம், வலிமை ஆகியவற்றை ஒரு வினாடிக்கும் குறைந்த நேரத்திலேயே மதிப்பிடும் திறன் கொண்டது. இத்துடன் கூடுதலாக, பன்னடுக்கு உலோகக் கலவைகள், கலவைகள், பன்னடுக்கு பூச்சுக்கள் போன்றவை மற்றும் இயந்திரப் பொருட்களின் உள்ளீடுகளைக் கண்டறிவதற்கான, மேம்படுத்தப்பட்ட தரவு ஆய்வுகளை மேற்கொள்ளும் திறனையும் வழங்குகிறது. 

மேலும் விவரங்களுக்கு , டாக்டர். சுதர்சன் பானி, spphani@arci.res.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.



(Release ID: 1617445) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi , Manipuri