அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளியில் உள்ள லித்திய மிகுதியை, லித்தியம் அதிகமுள்ள சிவப்புப் பெருமீன்களோடு இந்திய வானியற்பியல் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்புப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்

Posted On: 19 APR 2020 2:15PM by PIB Chennai

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான இந்திய வானியற்பியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட லித்தியம் அதிகமுள்ள  விண்மீன்களைக் கண்டறிந்து உள்ளனர். இது, லித்தியம் நட்சத்திரங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளி (interstellar) தளத்தில் அது மிகுந்து காணப்படுகிறது என்பதை குறிக்கிறது. சிவப்புப் பெருநட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சியில் புதிய பார்வைகளைத் திறந்து விடும் விதமாக, சிவப்புக் கொத்து ராட்சதர்கள் எனப்படும் மத்திய ஹீலியம் எரியும் நட்சத்திரங்களோடும், லித்தியம் உயர்வை அவர்கள் தொடர்புப்படுத்தி உள்ளனர்.

ஆதிகால லித்திய மிகுதியைக் கணிக்கும் மாதிரிகளைக் கொண்ட பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பாக்கத்தில் (BBN) உருவாகும் மூன்று ஆரம்ப கால கூறுகளில் ஒன்று லித்தியம் ஆகும். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் மற்ற இரண்டுமாகும். ஆனால், நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளி தளத்திலும் இளைய விண்மீன்களிலும் உள்ள லித்தியத்தின் தற்போதைய அளவு ஆதிகால மதிப்பை விட 4 மடங்கு அதிகமாகும். எனவே, பெரு வெடிப்பு அணுக்கருத் தொகுப்பாக்கத்தையும், நட்சத்திரங்களின் கலக்கும் செயல்பாட்டையும் உறுதி செய்ய, நமது பால்வெளியில் லித்திய செறிவூட்டலுக்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆர்வமளிக்கும் ஒரு விஷயமாகும். அதிக சக்தியுள்ள அண்டக் கதிர் துகள்கள், கரிமம் மற்றும் பிராணவாயு உற்பத்தி செய்யும் லித்தியம் போன்ற இலகுவான துகள்களோடு சேர்ந்து பெரும் உட்கருவோடு (nuclei) வெடிக்கும் எதிர்வினையோடு மட்டுமில்லாது, நட்சத்திரங்களும் பால்வெளியில் லித்தியத்துக்கான வாய்ப்புள்ள ஆதரமாக முன்மொழியப்படுகின்றன. விண்மீன்கள் லித்திய மூழ்கிகள் என பொதுவாக அழைக்கப்படும். சுமார் 2.5X10 6  K என்னும் நட்சத்திரங்களில் சுலபமாக எதிர்கொள்ளப்படும் மிகக் குறைந்த தட்ப வெட்ப அளவில் லித்தியம் எரிவதால், விண்மீன்களோடு பிறக்கும் அசல் லித்தியம், நட்சத்திரங்களின் வாழ்நாள் காலத்தை பொறுத்து தான் குறையும் என்பது இதன் பொருளாகும்.



(Release ID: 1616112) Visitor Counter : 170