அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தங்கத்தின் நேனோ கட்டமைப்பு மூலக்கூறு அடிப்படையைக் கொண்டு உயிரி-மூலக்கூறுகள் ரசாயனங்களுக்கு இடையில் ஆய்வகத்தில் நடைபெறும் மாற்றத்தைக் கண்டறிய முடியும்

Posted On: 17 APR 2020 4:46PM by PIB Chennai

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனம் நேனோ மற்றும் மென் பொருள்கள் அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள், அடிமூலக்கூறு (உயிரிகள் வாழும், வளரும் மேற்பரப்பு) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.  தங்கத்தின் நேனோ அமைப்பை பயன்படுத்தி கண்ணாடி மூலம்  புலனறிதலில் இது முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுப்புற இடை ஊக்கப் பொருள்களின் ஒளி ஊடுருவல் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களை இதுபோன்ற அடிமூலக்கூறுகள் கண்டறிந்துவிடும். எனவே ஆய்வகத்தில் முக்கியமான மூலக்கூறுகள் மற்றும் ரசாயனங்களை இது கண்டறியும்.

ரசாயன புலனறிதலில் இது மிகுந்த பயன்பாடு கொண்டதாக இருக்கும். நொதிப்பான்களுடன் தொடர்புடைய ஆன்டிஜென்களின் கரைக்க முடியாத தயாரிப்புகளால் நோய் எதிர்ப்பு அணுக்களை கிரகித்துக் கொள்வதன் மூலம் குறிப்பிட்டுக் காட்டும் தொகுப்பில் செயல்பாடுகளை அறிய இது உதவிகரமாக இருக்கும். ஒரே சமயத்தில் ஒரே மாதிரி சூழ்நிலையில், செம்மையாக பரிசோதனை நடத்துவதற்கு, பன்முக மூலக்கூறு அடிப்படைகளின் தேவையில்லாமல், முழுமையாக மேலோட்டப் பரிசோதனை செய்வதற்கு, சரி செய்து கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் இதற்குத் தேவைப்படுகின்றன.(Release ID: 1615708) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi , Punjabi