நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பொது முடக்கக் காலத்தின் 20 நாட்களில் ஆயிரம் ரயில் சரக்குப்பெட்டகங்கள் போக்குவரத்து: இந்திய உணவுக் கழகம் சாதனை

Posted On: 13 APR 2020 9:04PM by PIB Chennai

பொது முடக்கக் காலத்தின் போது, மார்ச் 24ம் தேதி முதல், சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை ஆயிரத்துக்கும் அதிகமான சரக்குப் பெட்டகங்களாக ரயில்களில் ஏற்றி அனுப்பி அரிய சாதனையை இந்திய உணவுக் கழகம் நிகழ்த்தியுள்ளது. இதே காலத்தில் சுமார் 27 லட்சம் மெட்ரிக் டண் சரக்குப் பெட்டகங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இறக்கியுள்ளது.

பொது முடக்கம் அமலாக்கப்பட்ட நாள் முதலாக, ஒவ்வொரு நாளும், இந்திய உணவுக் கழகம், 3 லட்சம் மெட்ரிக் டன் (ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்ட, சுமார் 60 லட்சம் பைகள்) சரக்குகளை ஏற்றி இறக்கியுள்ளது. இது அதனுடைய பொதுவான சராசரியை விட இரு மடங்காகும்.

ஊரடங்கு அமலாக்கப்பட்ட நாளிலிருந்து, ஏற்கனவே பிரதமரின் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 20 லட்சம் மெட்ரிக் டன் உட்பட (நாளொன்றுக்கு சராசரியாக 2.95 லட்சம் மெட்ரிக் டன்) பல்வேறு திட்டங்களின் கீழ் இந்திய உணவுக் கழகம், மாநில அரசுகளுக்கு ,59 லட்சம் மெட்ரிக் டன் (5.9 எம் எம் டி) உணவு தானியங்களை வழங்கியுள்ளது.



(Release ID: 1614229) Visitor Counter : 143