அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய புத்தாக்க அறக்கட்டளை கால்நடைகளுக்கான பூச்சிகளை நீக்கும் மூலிகை மருந்தை உருவாக்கியுள்ளது

Posted On: 11 APR 2020 12:16PM by PIB Chennai

கால்நடைகளைத் தாக்கும் தொற்றுக்கு சிகிச்சை அளித்து பூச்சியை அகற்றும் மூலிகை மருந்தை இந்திய தேசிய புத்தாக்க அறக்கட்டளை  என்ஐஎப் கண்டறிந்துள்ளது. ரசாயன முறைக்கு மாற்றாக முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த மூலிகை மருந்து இது. வணிகரீதியில் தயாரிக்கப்பட்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கிடைக்கும்.

‘wormivet’  என்ற பெயரிலான உள்நாட்டு மூலிகை பூச்சி மருந்து கால்நடை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வகையில், என்ஐஎப் பணியாற்றி வருகிறது. கால்நடைகளைத் தாக்கும் என்டோபாரசைட் எனப்படும் தொற்றுக்கு, உரிய தனித்துவமான மருந்தாக, குஜராத் மாநிலம் ஹர்ஷத்பாய் படேல் அனுப்பிய இது கண்டறியப்பட்டது. கால்நடைகளைத் தாக்கும் தொற்றை நீக்குவதில் இந்த மருந்தின் செயல்பாடு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலம் கிடைத்துள்ள முடிவுகள் வெற்றிகரமான பயன்களை அளித்துள்ளது.


(Release ID: 1613283) Visitor Counter : 225