நிலக்கரி அமைச்சகம்

மின்சாரம் மற்றும் மின் சாரம் சாரா நுகர்வோர்களுக்கு, பின்னர் செலுத்தக் கூடிய கடன் பத்திர வசதி: இந்திய நிலக்கரி நிறுவனம் அறிமுகம்

Posted On: 09 APR 2020 11:50AM by PIB Chennai
இந்திய நிலக்கரி நிறுவனம் (கோல் இந்தியா லிமிடெட்) தனது நிலக்கரி இருப்பில் 80 சதவீதத்தை மின்துறை நுகர்வோர்களுக்கு வழங்கி வருகிறது. நடப்பாண்டு 2020 – 21ல்,மின் துறைக்கு 550 மில்லியன் டன் நிலக்கரியை, இந்திய நிலக்கரி நிறுவனம் வழங்கியுள்ளது. மின்துறை நுகர்வோர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும், பொருளாதார அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், எரிசக்தி வழங்கும் ஒப்பந்தங்களுக்கு, நிலக்கரி வாங்குவதற்கு, முன்கூட்டியே பணம் செலுத்துவதற்குப் பதிலாக, நிலக்கரியை வாங்கிய பின்னர் பணத்தைச் செலுத்துவதற்கான கடன் பத்திர வசதியை, இந்திய நிலக்கரி நிறுவனம் ஏற்கனவே வழங்கியுள்ளது. மின் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்கான முதலீட்டு சுழற்சியை மேம்படுத்தவும், இது கணிசமாக உதவும் மின்துறை சாரா நிறுவன வாடிக்கையாளர்களுக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வசதியை, இந்திய நிலக்கரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தைகளில் பணப்புழக்கம் அதிகரிப்பதை இது ஊக்குவிக்கும். அதேசமயம் நிலக்கரி நுகர்வோர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த நிவாரணத்தை வழங்குவதாகவும், இது இருக்கும். ****

(Release ID: 1612486) Visitor Counter : 182