பாதுகாப்பு அமைச்சகம்

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது

प्रविष्टि तिथि: 06 APR 2020 6:10PM by PIB Chennai

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஊடுருவல்காரர்களை எதிர்த்து, கடும் பனி சூழலில் மிக நெருக்கத்தில் சண்டையிட்டனர். ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட 5 பேரையும் இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஊடுருவல் முயற்சி பற்றிய தகவல் கிடைத்ததும் மிகுந்த அனுபவம் பெற்ற பாரா எஸ்.எப். பிரிவில் இருந்து ஜே.சி.ஓ. அதிகாரியின் தலைமையின் கீழ் நான்கு வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வான்வழியாக தரையில் இறக்கப்பட்டனர். அதன் பிறகு நடந்த கடும் நேரடி சண்டையில், ஊடுருவல்காரர்கள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இருந்தபோதிலும், இந்தச் சண்டையில் இந்திய ராணுவம் சிறந்த 5 வீரர்களை இழக்க நேரிட்டது. சண்டை நடந்த இடத்தில் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

சுபேதார் சஞ்சீவ் குமார் தலைமையிலான சிறப்பு படையில் ஹவில்தார் தேவேந்திர சிங், பாராசூட் வீரர் பால கிருஷ்ணன், பாராசூட் வீரர் அமித்குமார், பாராசூட் வீரர் சத்ரபால் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


(रिलीज़ आईडी: 1611895) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Telugu