அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 போட்டி (C3) சவாலில் பங்கேற்குமாறு புதுமை சிந்தனையுள்ள குடிமக்களுக்கு என்.ஐ.எப். அழைப்பு

Posted On: 04 APR 2020 5:16PM by PIB Chennai

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், கோவிட்-19 போட்டியில் (C3)பங்கேற்குமாறு புதுமை சிந்தனையுள்ள குடிமக்களுக்கு தேசிய புதுமை சிந்தனை அமைப்பு - இந்தியா (என்.ஐ.எப்.) அழைப்பு விடுத்துள்ளது.

தங்களுடைய புதுமை சிந்தனைகளை முன்வைத்து ஆர்வம் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தாக்குதலைக் குறைப்பது தொடர்பான விஷயங்களில் புதுமைச்  சிந்தனைகளை முன்வைப்பதுடன், வீடுகளில் உள்ள மக்களை ஈடுபடுத்துதல், சத்தான ஆரோக்கியமான உணவு பரிந்துரைத்தல், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்தலில் இந்த சிந்தனைகள் ஆர்வம் கொண்டதாக இருக்க வேண்டும்.

புதுமை சிந்தனைகளை campaign@nifindia.org & http://nif.org.in/challenge-covid-19-competition-ல் அனுப்பி வைக்கலாம்.  மறு அறிவிக்கை வரும் வரையில் சுழற்சி அடிப்படையில் C3-யில் நுழைவுகள் ஏற்கப்படும்.

(மேலும் தகவல்களுக்கு திரு. துஷார் கார்க்கை tusharg@nifindia.org, செல்போன் 9632776780 .ல் தொடர்பு கொள்ளலாம்.)


(Release ID: 1611239) Visitor Counter : 161