விவசாயத்துறை அமைச்சகம்

ரபி பருவ பயிர்களை சுமுகமான முறையில் அறுவடை செய்யவும், கோடைகால பயிர்களை விதைக்கவும் வேளாண் ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Posted On: 03 APR 2020 8:34PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று பரவாமல் தடுக்க விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தின்போது, விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில். ரபி பருவ பயிர்களை சுமுகமாக அறுவடை செய்வதற்காகவும், கோடை காலப் பயிர்களை விதைப்பதற்கும், இந்திய அரசின் வேளாண் ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இழப்பீடு கோரி வந்துள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது; ரபி 2019 20 பயிர்களுக்கான நடவடிக்கைகளின் தற்போதைய நிலையைப் பரிசீலிப்பது; பயிர் இழப்பு ஆய்வுகளை மேற்கொள்வது; ஸ்மார்ட் சாம்ப்ளிங் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவது, ஆகியவை குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுடன் காணொளி காட்சி மூலம் மாநாடு நடத்தப்பட்டது.

 

தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தோட்டக்கலை விளைபொருட்களின் போக்குவரத்து சுமுமா நடைபெறுவதற்காகவும், அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காகவும்,  பயிரிடுபவர்கள், கொள்முதல் செய்பவர்கள், மொத்த வியாபாரிகள், மண்டிகள், மாநில தோட்டக்கலை துறைகள்  ஆகியவற்றுடன் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

பொது முடக்கக் காலத்தின்போது 21 இடங்களில் கிசான் கால் சென்டர் எனப்படும் விவசாய தொலைத் தகவல் தொடர்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்களுக்கு வரும் அழைப்புகள், விவசாய தொலைபேசி ஆலோசகர்களின், தனிப்பட்ட அலைபேசி எண்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, இந்த ஆலோசகர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே பணியாற்றுகின்றனர். 454  இருக்கைகள் கொண்ட இந்த விவசாய தொலைத்தகவல் தொடர்பு மையம், தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அழைப்புகள் வரை வந்து கொண்டிருக்கின்றன

 

***



(Release ID: 1611005) Visitor Counter : 151