இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

பற்றாக்குறையை சமாளிக்க வீட்டிலேயே தயாரிக்கப்படும் முககவசங்கள்

प्रविष्टि तिथि: 02 APR 2020 12:40PM by PIB Chennai

முககவசங்களை எங்கு வாங்குவது என்று கவலைப்படுபவரா நீங்கள்? இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் உங்களுக்காக ஒரு புதுமையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது: வீட்டில் தயாரிக்கப்படும் முககவசம். ”இது முககவசம் அணிய விரும்பும் ஆனால் அதை வாங்க முடியாத மக்களுக்கானது. துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய முககவசங்களை அவர்கள் வீட்டிலேயே உருவாக்க முடியும்” என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் மூத்த ஆலோசகரான டாக்டர் ஷைலஜா வைத்யா குப்தா கூறுகிறார்.

இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், வீட்டில் தயாரிக்ககூடிய முககவசங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டது: வீட்டிலேயே தயாரிக்ககூடியசார்ஸ் - கோ 2” கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான முககவசங்கள்”. இதை தயாரிப்பதற்கான முக்கிய காரணங்கள், எளிதில் கிடைக்ககூடியப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும், பயன்பாட்டிற்கு பிறகு மறு சுழற்சியில் பயன்படுத்தவும் ஏதுவானவை.

வீட்டில் முககவசங்களை தயாரித்துப் பயன்படுத்துவது பற்றிய விரிவான கையேட்டைப் பதிவிறக்கம் செய்ய http://bit.ly/DIYMasksCorona இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


(रिलीज़ आईडी: 1610241) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada